உங்க குழந்தைங்க உயரமா வளர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..

kids

Child growth tips-குழந்தைகள் உயரமாக வளர உதவும் உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை பற்றி இப்பதிவில் காண்போம்.

குழந்தைகளின் வளர்ச்சியை   அவர்களின் மரணுக்கள்தான் தீர்மானிக்கும் .இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மரபணுக்களின்படி 80 சதவீதம் என்றால் மீதம் 20% மரபணுக்களை தாண்டியும் வளர முடியும் .இதற்கு உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை முறையாக பின்பற்றும் போது நல்ல வளர்ச்சியை பெற முடியும்.

அது மட்டுமல்லாமல் பெண் பிள்ளைகளின் வளர்ச்சி 18 வயது வரையும் அதிலும் குறிப்பாக 12 வயதுக்குள் அந்தப் பெண் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஆகாரங்களை கொடுக்கும் போது நல்ல வளர்ச்சி இருக்கும். ஆண் பிள்ளைகளின் வளர்ச்சி 21 வயது வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த வயது காலகட்டத்தில் வளர்ச்சிக்கு தேவையான உணவுகளை கொடுத்து வர வேண்டும்.

குழந்தைகள் வளர டிப்ஸ் ;

காலை எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகள் வெளியேறி செல்களுக்கு நல்ல ஆக்சிசன் கிடைக்க வழி வகுக்கும்.

பிறகு அரை மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா மற்றும் நாட்டு சக்கரை கலந்து குடித்து வரலாம். சிறியவர்கள் என்றால் அஸ்வகந்தாவின் அளவை குறைத்துக் கொள்ளவும். இந்த அஸ்வகந்தா ஹியூமன் கிரௌத்  ஹார்மோனை தூண்டச் செய்யும்.

உணவு முறைகள்;

உணவு முறையை பொறுத்த வரை சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உயரமாக வளர வேண்டும் என்றால் புரதச்சத்து மற்றும் கால்சியம் ,விட்டமின் டி சத்துக்களை சற்று அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சில குறிப்பிட்ட உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம்  நல்ல வளர்ச்சியைப் பெற முடியும் அது என்னவென்றால் கேழ்வரகு, சுண்டல் ,முட்டை, முருங்கைக்கீரை, முளைகட்டிய பச்சைப்பயிறு, உளுந்தங்கஞ்சி , பருப்பு வகைகள், பனைவெல்லத்தால் செய்யப்பட்ட எள்ளுருண்டை, கடலை உருண்டை ,பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், வேர்க்கடலை வால்நட் ,பாதாம் பருப்பு ,சிவப்பு இறைச்சி ,

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் கீரைகளில் குறிப்பாக முளைக்கீரை இந்த முளைக்கிறையை தொடர்ந்து 40 நாட்கள் கூட்டாகவோ பொறியலாகவோ குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நல்ல வளர்ச்சியை கொடுக்கும். மேலும் பிரண்டை துவையல் ,மணத்தக்காளி கீரை ,பீன்ஸ், சோயா பீன்ஸ் ,காளான் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி;

உடற்பயிற்சியைப் பொருத்தவரை பேஸ்கெட் பந்து  ,புட் பால் , ஸ்கிப்பிங் ,போன்றவை வளர்ச்சியை தூண்டக்கூடிய உடற்பயிற்சியாகும் .இந்த பயிற்சிகளில் ஓட்டம் மற்றும் குதித்தல் இருக்கும் இதனால் தசைகள் நன்கு சுருங்கி விரியும். இது வளர உறுதுணையாக இருக்கும்.

மேலும் உயரமான கம்பிகளை  பிடித்து தொங்குதல் போன்று ஹாங்கிங் எக்ஸர்சைஸ் போன்றவற்றை கடைப்பிடித்தாலும் தசைகளுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும். எலும்புகளுக்கும் வளர்ச்சி இருக்கும் இதனால் நல்ல உயரத்தை பெற முடியும்.

அது மட்டுமல்லாமல் வளர்வதற்கு அவசியமானது தூக்கம் இது எட்டு மணி நேர தூக்கம் ஆழ்ந்த தூக்கமாக இருக்க வேண்டும்.தூங்கும் பொழுது வளைந்து தூங்காமல் உடலை நேராக வைத்து தூங்க வேண்டும்.

மேலும் நடக்கும்போதும் உட்காரும்போதும் முதுகுத்தண்டை வளைத்து உட்காராமல் நேராக இருக்க வேண்டும் இதன் மூலமும் உயரமாக வளர முடியும்.

எனவே மேற்கண்ட உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சிகளை பின்பற்றினால் நிச்சயம் உயரமாக வளர முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்