Spilt ends-தலைமுடியின் கீழ் நுனி பகுதி வெடித்து இருப்பதற்கான காரணங்களும் பற்றி இப்பதிவில் காணலாம்.
தலைமுடி வெடிப்பு என்பது முடியின் நுனிப்பகுதியில் இரண்டாகப் பிளந்து முடியின் கருமை நிறம் மாறி காணப்படும்.
தலைமுடியின் நுனிப்பகுதி வெடிக்க காரணமாக இருப்பது தலைக்கு சரியாக எண்ணெய் தேய்க்காமல் இருப்பது தான் மேலும் எப்போதுமே வறண்ட தலைமுடி இருப்பவர்களுக்கும் இந்த முடி வெடிப்பு இருக்கும்.
வாரத்தில் ஒரு முறை நல்லெண்ணையை சூடு செய்து அதனை தலைமுடியில் தடவி 30 நிமிடம் கழித்து குளித்து வர வேண்டும்.
ஷாம்புகளை பயன்படுத்தும் போது குறைந்த அளவில்தான் பயன்படுத்த வேண்டும் .ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்தும் போது அது முடி வறட்சியை ஏற்படுத்தி முடி வெடிப்பை அதிகரித்து விடும் .அதனால் எண்ணெய் பசை உள்ள ஷாம்புகளை தேர்வு செய்து பயன்படுத்தவும்.
மேலும் ஷாம்புகளில் உள்ள கெமிக்கல் வீரியம் குறைய ஷாம்பு பயன்படுத்தும் போது பாலுடன் சேர்த்து கலந்து பிறகு தலைக்கு தேய்த்து குளித்துக் கொள்ளவும்.
அவ்வப்போது அரிசி வடித்த தண்ணீரை தலைக்கு தேய்த்து 30 நிமிடம் கழித்து குளித்துக் கொள்ளவும்.
மேலும் வாரத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெய் சம அளவு கலந்து தேய்த்து 30 நிமிடம் கழித்து குளித்து வந்தால் தலைமுடியில் உள்ள பூச்சி வெட்டு புழுவெட்டுகள் நீங்கும்.
ஹேர் டையர் போன்றவற்றை தலைமுடிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குளிப்பதற்கு முன் தலைக்கு எண்ணெய் தேய்த்து விட்டு குளிக்க வேண்டும்.
தலை குளிப்பதற்கு முன் கொஞ்சமாவது எண்ணெய் பசையுடன் இருக்க வேண்டும் இல்லையெனில் மேலும் முடியின் வறட்சியை ஏற்படுத்தி முடி உதிர்வையும் ஏற்படுத்தும்.
தலை குளித்த பிறகு முடியை கனமான துணையை கொண்டு துடைப்பதை தவிர்க்கவும் ,இதனால் முடி வேருடன் வர காரணமாகும் .அதனால் சாப்டான துணிகளை பயன்படுத்துங்கள் .
மேலும் இவ்வாறு வெடிப்பு உள்ள முடிகளை மட்டும் கத்திரிக்கோல் கொண்டு நறுக்கி விட்டால் மீண்டும் வளரும்போது நன்றாக வளரும்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…