எப்பேர்பட்ட முகப்பருக்களாக இருந்தாலும் சரி இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!
நம் முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இந்த முகப்பருவும் ஒன்று. இது இளம் பருவத்தினருக்கு மிகப்பெரிய பிரச்சனையும் மன கவலையையும் உண்டு பண்ணும். எனவே முகப்பரு ஏன் வருகிறது அதை எப்படி தடுக்கலாம். மேலும், வந்தால் அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம் முகத்தில் முகப்பரு ஏற்பட பல காரணங்கள் உள்ளது.
காரணங்கள்
- அதில் எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கு நிச்சயம் முகப்பரு ஏற்படும்.
- வெளியில் சென்று வீடு திரும்பிய பிறகு முகத்தை கழுவாமல் இருப்பது.
- ரசாயனம் கலந்த கிரீம்களை உபயோகிப்பது. மேலும், அழகு சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது.
- ஹார்மோன் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும், கர்ப்பப்பையில் தொந்தரவு உள்ளவர்களுக்கும் முகப்பரு தோன்றும்.
- ஒரே தலையணையை பல மாதங்களாக பயன்படுத்தினாலும் முகப்பரு ஏற்படும்.
- அளவுக்கு அதிகமாக முகத்தை கழுவிக் கொண்டே இருந்தால், முகத்தில் எண்ணெய் பசைஅதிகமாக சுரக்கும். இதன் மூலமும் முகப்பருக்கள் வரும்.
பெற்றோர்களே உங்க குழந்தை ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறதா.? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்.!
தடுக்கும் முறை
- தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு நாளைக்கு மூன்று முறை முகம் கழுவ வேண்டும். குறிப்பாக, தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தை கழுவ வேண்டும்.
- வாரத்திற்கு மூன்று முறை தலைக்கு குளிக்க வேண்டும்.
- நீங்கள் உபயோகிக்கும் கிரீம்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என அறிந்து பயன்படுத்த வேண்டும்.
- மேலும் அழகு சாதன பொருட்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சரி செய்யும் முறை
வேப்ப இலை சிறிது எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பருக்கள் மீது வைத்து வர பருக்கள் விரைவில் மறையும். அதுமட்டுமில்லாமல் பரு ஏற்பட்ட அந்தக் கரும்புள்ளிகளும் நீங்கும் இந்த முறையை வாரத்தில் மூன்று நாட்கள் இரவு நேரத்தில் பயன்படுத்தலாம்.
கடலை மாவுடன் ரோஸ் வாட்டர் கலந்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வெளியில் சென்று வந்த பிறகு போட்டு வரலாம். முகப்பரு உள்ளவர்கள் முகத்தை அழுத்தி தேய்த்தல் கூடாது.
கடுக்காய் பொடி, துளசி பொடி, சந்தன பொடி, வேப்ப இலை பொடி, மஞ்சள் தூள், அதிமதுரம் பொடி ஆகியவற்றை உங்கள் முகத்துக்கு தேவையான சம அளவு எடுத்து தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். மசாஜ் செய்யக்கூடாது.
இந்த பவுடர்களை நாட்டு மருந்து கடையில் வாங்கி பயன்படுத்தலாம். வாங்கும் போது அதன் காலாவதி தேதிகளை பார்த்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு 40 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பருக்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
லிக்விட் கொசு விரட்டிகளை பயன்படுத்துவது நல்லதா.? கெட்டதா.? உங்கள் சந்தேகத்திற்கான தீர்வு.!
இந்த முறையை பயன்படுத்தும் போது கெமிக்கல் கலந்த க்ரீம், ஃபேஸ் வாஷ் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. முகத்தை கழுவ கடலை மாவு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். வறண்ட சருமமாக இருந்தால் பச்சைபயிறு மாவு பயன்படுத்தி முகத்தை கழுவலாம்.
மேலும், பழங்கள் மற்றும் கீரைகளை அதிக அளவு நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இந்த முறைகளை பயன்படுத்தினால் மிக விரைவில் எப்பேர்பட்ட பருவாக இருந்தாலும் சரி செய்யலாம்.