ரவா உப்புமா- ரவை உப்புமா உதிரியாக வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம்.
ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து முதலில் லேசாக வறுக்கவும் .பிறகு அதில் 1 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பொன் நிறமாக வரும் வரை வறுக்கவும் அப்போதுதான் ரவை ஒட்டாமல் உதிரியாக வரும்.
பிறகு இதை தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதே பாத்திரத்தில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கடலைப்பருப்பை சேர்க்கவும் . கடலைப்பருப்பு பொன்னிறமாக வந்ததும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் ,வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தால் போதுமானது. அப்போதுதான் உப்புமா சுவையாக இருக்கும். பிறகு அதில் ரவையை கொட்டி ஒரு நிமிடம் கலந்து விட்டு இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும் ,
தண்ணீர் வற்றும் வரை கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பின்பு அதை கிளறி இறக்கினால் உதிரியான உப்புமா தயாராகிவிடும்.
உப்புமாவிற்கு எண்ணெய் சற்று அதிகமாகவும் , தண்ணீரின் அளவு 1:2 இந்த அளவில் இருந்தால் சுவையாகவும் உதிரியாகவும் இருக்கும்.
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …