வாழ்க்கையில ஒருமுறையாவது இந்த மாறி இடத்துக்கு போய்விட்டு வரணும்..!

Default Image

வாழ்க்கையில் இதுபோன்ற அருமையான இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள். 

பொதுவாகவே மனம் அமைதியில்லாமல் இருந்தாலும் சரி, நமக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு இருந்தாலும் சரி வெளியே சுற்றுலா சென்று வந்தால் போதும். மனம் மட்டும் இல்லாமல் உறவுகளும் பலப்படும். இந்தியாவில் இருக்கும் இந்த இடம் அருமையான ஒரு பார்வைக்கு உகந்த இடம். பொதுவாகவே சுற்றி பார்க்க செல்பவர்கள் இயற்கையான இடத்திற்கு செல்வதற்கு விரும்புவார்கள்.

இந்தியாவில் இயற்கை என்று கூறினாலே கேரளா செல்ல அனைவரும் விரும்புவார்கள். அதிலும் கேரளாவில் இருக்கும் மிதக்கும் பாலம் பலரது விருப்பமாக இருக்கிறது. இந்த இடம் பார்ப்பதற்கு மெய்மறக்கும் வகையில் இதன் அழகு இருக்கிறது. கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்துள்ள பேப்பூர் கடற்கரையில் கட்டப்பட்டுள்ளது  மிதக்கும் பாலம். இது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது. இந்த மிதக்கும் பாலத்தில் 500 நபர்கள் ஒரே நேரத்தில் செல்ல முடியும்.

இருந்தாலும் பாதுகாப்பு கருதி அதில் 50 பேரை மட்டுமே அனுமதிக்கின்றனர். மேலும் இந்த பாலத்தில் செல்ல விரும்புவர்கள் உடலில் பாதுகாப்பு கவசம் அணிந்து மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பாலத்தில் நடக்க காலை 11 மணி முதல், மாலை 6 மணி வரை அனுமதிக்கின்றனர். மேலும் இந்த பாலத்தை உயர் அடர்த்தி பாலிஎதிலின் செங்கற்களால் கட்டியுள்ளனர். இதன் அகலம் 15 மீட்டர் ஆகும். இந்த இடத்தில் நீங்கள் சென்று பார்த்தால் கடலின் முழு அழகையும் ரசிக்க முடியும். இது உங்களுக்கு சிறந்த சுற்றுலா இடமாக நிச்சயம் இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்