எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!

Default Image

நம்மில் உடல் எடை கூட நினைப்பவர்களின் எண்ணிக்கையை விட, கூடிய உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே அதிகம். இந்த பதிப்பில், எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று படித்து அறியலாம்.!

உணவு முறை

உடல் எடையை குறைக்க வேண்டுமாயின், அதற்கு எது அடிப்படை என்பதை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். உண்ட உணவின் காரணமாக கூடிய உடல் எடையை, சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலமாக தான் குறைக்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க பலவிதமான டயட் முறைகள் நடைமுறையில் இருந்தாலும், எது உங்களின் பழக்க வழக்கம் மற்றும் உங்களின் குணத்திற்கு பொருந்தும் என தேர்ந்தெடுத்து, அந்த உணவு முறையை சரியாக பின்பற்றுதல் வேண்டும்.

தெளிவு வேண்டும்!

எதை உண்ணலாம் மற்றும் எதை உண்ண கூடாது என்று உணவு முறை குறித்த ஒரு தெளிவான அணுகுமுறையை அவசியமாக கொண்டிருத்தல் வேண்டும்.

எந்த உணவுகள் அதிக கலோரிகளை குறைக்க உதவும் போன்ற கணக்குகளை மனதில் கொண்டு, உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

உறக்கமுறை.!

தினமும் உடலுக்கு போதிய அளவு ஓய்வினை வழங்க வேண்டியது அவசியம்; ஒரு மனிதன் தினமும் சராசரியாக குறைந்தபட்சம் 7 மணி நேரங்கள் கட்டாயம் உறங்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் உறக்க முறைகளை சரியாக கண்காணித்து வருதல் அவசியம். இரவு விரைவில் உறங்கி, காலையில் துயில் எழுதல் அவசியம்.

உடற்பயிற்சி

உங்களால் முடிந்த அளவுக்கு தினமும் சரியான உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும். ஒரு நாளைக்கு 30-60 நிமிடங்கள் கட்டாயமாக உடற்பயிற்சிகளை சரியாக செய்து வருதல் அவசியம்.
கட்டுப்பாடு வேண்டும்!

உணவு மற்றும் பிற பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும்; உடலிற்கு எவ்வளவு கலோரிகள் தேவையோ, அவற்றை மட்டுமே உட்கொள்ள வேண்டும். பிடித்த அல்லது கண்ணை பறிக்கும் உணவு வகைகளை உண்ணாமல் மனதை கட்டுப்படுத்த பழக வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்