உடற்பயிற்சி செய்பவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா…..?
உடற்பயிற்சி செய்பவர்கள் எல்லாவற்றிலும் சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சரியான வழிமுறைகளை பின்பற்றாத நிலையில், அது சரியான பலனை அளிக்காது. இப்பொது உடற்பயிற்சி செய்பவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
காபி :
உடற்பயிற்சிக்கு முன்பு காபியை அளவாக குடித்து ஆரம்பித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் உடற்பயிற்சிக்கு முன் இஞ்சி டீ போட்டு குடித்து, பின் உடற்பயிற்சியை ஆரம்பித்தாள், தசை வழியை தடுக்கலாம்.
ஆப்பிள் :
ஆப்பிளில் உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய வைட்டமின்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. தினமும் உடற்பயிற்சிக்கு முன்பு ஒரு ஆப்பிளை சாப்பிட்டு மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பருப்பு வகைகள் :
வெதுவெதுப்பான பாலில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, உடற்பயிற்சிக்கு முன் குடித்தால், உடற்பயிற்சியின் போது உடலின் ஆற்றலானது அதிகரிக்கும். பருப்பு வகைகளில் அதிகமான அளவில் புரோட்டீன் மற்றும் பி காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், இதனை சாப்பிட்டால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்கும்.
முட்டை :
உடற்பயிற்சி செய்த பின், உடலில் உள்ள தசை வளர்ச்சிக்கு அதிக புரதச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். இத்தகைய புரதசத்து, முட்டையில் உள்ள வெள்ளை கருவில்போதுமான அளவில் உள்ளது. நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் வழமையான அளவு புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் கால்சியம் அடங்கியிருக்கிறது.
வாழைப்பழம் :
இதில் எளிமையான கார்போஹைட்ரேட் இருப்பதால், செரிமானம் சுலபமாக நடக்கும். மேலும் கிளைக்கோஜென்னின் அளவை அதிகரிக்கும். 2 வாழைப்பழம் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது.