நமது வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது முக்கியமான ஒன்றாகும். இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தரக் கூடியது. இந்த உடற்பயிற்சியில் பல வகையான உடற்பயிற்சி உண்டு.
இந்த உடற்பயிற்சிகளில் மிதிவண்டி பயிற்சியும் ஒன்று. இது மற்ற உடற்பயிற்சிகளை விட மிக சிறந்த உடற்பயிற்சி என்றே சொல்லலாம். நம் அவசர ஓட்டத்தில் எதுமே நம் கை தூரத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரோக்கியத்தை அள்ளித்தந்த மிதிவண்டி ஓட்டும் பயனுள்ள பழக்கத்தை மறந்தே போய்விட்டோம்.
மிதிவண்டிப் பயணம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற ஒரு உடல்நலப் பயணம். மிதிவண்டி மிதிப்பதால் நம் கால்கள் வலுப் பெறுவதோடு நம் இதயத்தின் இயங்கு திறனை வலுபடுத்தும் என்பது மருத்துவர்கள் நிருபித்துள்ளனர்.
உடல் எடை குறைய வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த மிதிவண்டி பயிற்சியை மேற்கொள்ளலாம். அரைமணி நேர மிதிவண்டி பயிற்சி குறைந்தது உடம்பில் உள்ள 300 கலோரி கொழுப்பின் அளவை எரிக்கும் சக்தி வாய்ந்தது.
இந்த பயிற்சி நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைத்து, உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கிறது.
இதய நோய் உள்ளவர்கள் மிதிவண்டி பயிற்சி மேற்கொண்டால் இதய நோயில் இருந்து விடுதலை பெறலாம். இது இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதால் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை தவிர்த்து இரத்தக் கொதிப்பு, இதய நோய்களிலிருந்து நம்மை முற்றிலும் பாதுகாக்கிறது.
இந்த மிதிவண்டி பயிற்சி சுவாச கோளாறுகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரை மணி நேர பயிற்சியின் போது சுவாசம் சீராக்கபடுவதால் மூளைக்குத் தேவையான சுத்தமான பிராணவாயு கிடைக்கிறது. இதனால் மூளை சீராக இயக்கப்படும் போது தேவையற்ற பயம், மன அழுத்தம் போன்ற நோய்கள் நம்மை நெருங்காது.
பலரும் இன்று சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை. இடுப்பு சதையை குறைப்பதில் மிதிவண்டி மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
இடுப்பில் அதிகமாகத் தேங்கும் கொழுப்பைக் குறைக்க மருத்துவர்களாலும், உடற்பயிற்சி வல்லுனர்களாலும் பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சியில் மிதிவண்டிப் பயற்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…