உடலில் காணப்படும் அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவும் 5 உடற்பயிற்சிகள் யாவை?
பிடித்த உணவுகளை எல்லாம் வகை தொகையின்றி உண்டு, பெருத்துவிட்ட உடல் எடையை குறைக்க படாதபாடு படுபவர் பலர்; அப்படி அதிகரித்து காணப்படும் எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் உடலில் காணப்படும் கூடுதல் கலோரிகளை எரிக்க வேண்டியது அவசியம்.
இந்த பதிப்பில் உடலில் காணப்படும் அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவும் 5 உடற்பயிற்சிகள் யாவை என்பது பற்றி படித்து அறியலாம்.
ஸ்கிப்பிங்
ஸ்கிப்பிங் உடற்பயிற்சி செய்கையில், உடலில் உள்ள அத்தனை பாகங்களும் இயக்கத்தில் இருக்கும்; இதனால், உடலில் எந்தெந்த பாகங்களில் எல்லாம் அதிக கொழுப்புகள் உள்ளதோ, அவை இந்த ஸ்கிப்பிங் உடற்பயிற்சி மூலம் எளிதில் எரிக்கப்படும்.
நீச்சல்
நீச்சல் பயிற்சியிலும் உடலின் அனைத்து உறுப்புகளும் இயக்கத்தில் இருக்கும்; அதிலும் தண்ணீருக்கு அடியில், தண்ணீரில் நீச்சலடிக்க அதிக ஆற்றல் தேவைப்படும். ஆகையால் நீச்சல் பயிற்சியை தினமும் செய்து வந்தால், உடலின் தேவையற்ற கலோரிகள் எளிதில் குறைந்து விடும்.
ஜாக்கிங்
தினமும் காலையில் நீர் மட்டும் பருகிவிட்டு, வெறும் வயிற்றில் ஜாக்கிங் செய்தால் அது உடலில் உள்ள கலோரிகளை எளிதில் எரிக்க உதவும். ஜாக்கிங் பயிற்சியை தொடர்ந்து செய்வது கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற உதவும்.
மாடிப்படி ஏறுதல்
லிப்ட் போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்தாமல், மாடிப்பாடிகளை பயன்படுத்தினாலே, உடலின் பெரும்பகுதி கொழுப்புகளை குறைத்து, கலோரிகளை எரித்து விடலாம். இந்த பயிற்சியை தினந்தோறும் பின்பற்ற முயலுங்கள்.
ஏரோபிக் பயிற்சி
ஏரோபிக் பயிற்சிகளை அன்றாடம் செய்து வருவதன் மூலம், உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்பையும், கலோரிகளையும் எளிதில் குறைக்க முடியும்.