தூங்கும் போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா.? இதனை கடைபிடியுங்கள்…

Financial Habits

Financial Habits : பணம் என்பது நாம் அனைவருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அதனை எப்படி சம்பாதிப்பது? மாத சம்பளம் வாங்கினால் நமது கனவுகள் நினைவாகி விடுமா? தொழில் தொடங்கினால் சரியாக இருக்குமா? அதில் நஷ்டம் ஏற்பட்டால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? சரியான நேரம் அமைந்தால் நமது வாழ்வு மாறிவிடுமா? என்று பல்வேறு விதமான கேள்விகள் நம்முள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். உண்மையில் பணத்தை சம்பாதிப்பதற்கு எளிய வழி தான் என்ன என்பதை பற்றிய சரியான தெளிவுரையை இதில் காணலாம்.

மாத சம்பளம் :

நமது சம்பளம் மாதம் 20 ஆயிரம் ரூபாய் என வைத்து கொள்வோம். அது வருடத்திற்கு 2000 ரூபாய் அதிகரிக்கும் என எடுத்துக் கொள்வோம். நமது தேவைகள் போக மாதம் 2000 ரூபாய் சேமித்துக் கொள்வதாக இருந்தாலும் கூட, ஆண்டுதோறும் 2000 ரூபாய் உயர்வு என்பது அன்றைய காலகட்டத்தில் பொருளாதாரமும், அதற்கு ஏற்ற விலைவாசியும் உயர்வு பெற்றுவிடும். ஆதலால் நமது வரும் சேமிப்பு என்பது மாதம் 2000 என்பது கஷ்டமான ஒன்றாக மாறிவிடும். இதனால் எந்தவித முன்னேற்றமும் நமக்கு இருக்காது. ஆதலால் மீண்டும் அந்த சேமித்த பணத்தை செலவழிக்கும் பழக்கம் நம்மிடம் வந்து விடும்.

கற்றல் திறன் :

மேற்கண்ட பிரச்சனையை சரிகட்ட ஒரே வழி புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வது மட்டுமே. புதிதாக ஒன்று என்றவுடன் புதிய படிப்பு என்று நினைத்து கொள்ள வேண்டாம். அது நமது தொழிலின், வேலையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல கற்றுக்கொள்ள வேண்டியது. பொருளாதார ரீதியில் அடுத்து என்ன செய்வது என யோசித்து முதலீடு செய்வதாக கூட இருக்கலாம்.

அதிக சம்பளம் தரும் வேலை :

உலகில் இரண்டு வகையான பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஒன்று அதிக வருமானம் ஈட்டும் நபர்கள். உதாரணத்திற்கு நடிகர்கள், விளையாட்டு வீரர்களை வைத்துக் கொள்வோம். அவர்களால் ஒரு படம் நடித்தால், வர்த்தக ரீதியில் விளையாடினால் கோடிக்கணக்கில் சம்பாதித்து விடுவார்கள். அதனை வைத்து ஆடம்பர வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால், அவர்களுக்கு எதில் முதலீடு செய்வது என்பது தெரியாது. அவர்கள் திரை வாழ்க்கை மோசமாக அமைந்து விட்டாலோ, விளையாட்டு திறன் குறைந்தாலோ அவர்களின் வருமானம் அப்படியே அதள பாதாளத்திற்கு சென்றுவிடும்.

பணத்தை வேலை செய்ய வைக்கும் நபர்கள் :

இரண்டாம் வகையில் பணத்தை தமக்காக வேலை செய்ய வைப்பவர்கள். அவர்களின் வேலை என்னவாக இருக்கும் என்றால், புதிதாக ஏதேனும் முதலீடுகள் பற்றி கற்க வேண்டும், அதனை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என யோசிப்பார்கள். உதாரணத்திற்கு புதிதாக வீடு வாங்க நினைப்பவர் என்றால், இம்மாதிரியான ஆட்கள் பெரிய நிலப்பரப்பில் ஒரு தனி வீடு வாங்க நினைக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக சிறிய வீடுகளை கட்டி தில் தமக்கு வசதிகேர்ப்ப ஒரு வீட்டில் வசித்து கொண்டு மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் மாத வருமானம் வர வழிவகை செய்துவிடுவர்.

முதல் படி :

உலகில் மூன்று வகையாக நாம் பணத்தை சம்பாதித்து பணக்காரராக மாறலாம். முதலில் அதிக வருமானம் தரும் வேலையை தேட வேண்டும். அதில் நிலையாக பணத்தை வர வைக்க வேண்டும். பின்னர் அதனை சரியான பங்கு சந்தை  அல்லது வேறு வழியில் முதலீடு செய்ய அறிந்து அதனை செயல்படுத்த வேண்டும்.

இரண்டாம் படி :

அடுத்தது நமக்கு ஒரு தொழில் தெரிந்து இருக்க வேண்டும். நாம் பார்க்கும் வேலையை சிறிய அளவில் தொழிலாக விரிவுபடுத்த தெரிய வேண்டும். ஐடி வேலை பார்ப்பவர்கள். வெளியில் சிறு சிறு புராஜெட் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவது போல. பின்னர் அதனை எவ்வாறு மற்றவர்களை வேலைக்கு அமர்த்தி அதன்மூலம் லாபம் சம்பாதிப்பது என தெரிந்திருக்க வேண்டும்.

மூன்றாம் படி :

மூன்றாவது இது மிகவும் முக்கியமான ஒன்று. நமக்கு தேவையான நிலையான சொத்துக்களை வாங்க வேண்டும். நமது வேலை, ஆன்லைன் முதலீடு என அனைத்தும் வீழ்ந்தாலும் நம்மை காப்பாற்றும் சொத்தாக இருக்க வேண்டும். விவசாய நிலங்கள், தங்கம், வெள்ளி, வீடு போன்றவற்றில் முதலீடு செய்து அதனை அடுத்தடுத்த சம்பாத்தியத்துக்கு உபயோகப்படுத்த வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi