Fat – Food : உடல் எடையை குறைக்க விரும்புவோர் கவனத்திற்கு..! கொழுப்பை குறைக்கும் 5 உணவுகள்..!

Weight loss

இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. பொதுவாக நமது உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்றால், தேவையற்ற கலோரிகள் நமது உடலில் சேருவது தான். முதலாவது நாம் நமது உடலில் சேரும் தேவையற்ற கலோரிகளை குறைப்பதற்கு முயற்சி செய்தாலே உடல் எடை குறைந்து விடும். தற்போது இந்த பதிவில், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் 5 உணவுகள் பற்றி பார்ப்போம்.

பட்டை 

உடல் எடையை குறைப்பதில் பட்டை மிக முக்கிய பங்காற்றுகிறது. பட்டையில் உள்ள குரோமியம், இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. பட்டை ஆற்றல் செலவை அதிகரிக்க உதவுவதால், இது எடை இழப்பை ஊக்குவிக்க உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், தினமும் ஒரு டீஸ்பூன் பட்டை தூளை உணவில் சேர்க்கலாம். ஒரு டீஸ்பூன் பட்டை தூளை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.

பூண்டு 

பூண்டு உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பூண்டில் உள்ள சல்பர் பைருவேட் (S-allyl cysteine) என்ற பொருள் பசியை குறைக்க உதவுகிறது. பூண்டு கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. எனவே உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

மஞ்சள் 

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. குர்குமின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்து, உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. எனவே தினமும் நமது சமையல்களில் மஞ்சளை சேர்ப்பது நல்லது.

வெந்தயம் 

 வெந்தயத்தில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் மற்றும் பசியைகுறைக்கும் தன்மை கொண்டது. வெந்தயத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுவதோடு, இது கொழுப்பை எரிக்கவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

கிரீன் டீ 

 கிரீன் டீயில் உள்ள கேடசின்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை எரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.  கிரீன் டீயில் உள்ள கேடசின்கள் உணவு உண்ணும் உணர்வை குறைக்க உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்