முகம் கறுத்து போய் இருந்தால் சோப்பு முகம் கழுவாமல் இந்த 2 பொருளை பயன்படுத்தி பாருங்கள் முகம் பொலிவுடன், வெள்ளையாக இருக்கும்.
முகம் பளிச்சென்று, அழுக்கில்லாமல் இருப்பதற்கு தினமும் முகம் கழுவுவது போதாது. முகத்திற்கு நாம் சோப்பு போட்டு முகம் கழுவுவதினால் பார்ப்பதற்கு அந்நேரம் வெள்ளையாக தெரியும். மேலே இருக்கும் அழுக்கு வெளியேறி இருக்கும். ஆனால், முகத்திற்கு உள்ளே இருக்கும் தூசி, துகள் என அப்படியே படிந்திருக்கும். இதனால் முகம் பார்ப்பதற்கு வெள்ளையாக தெரியாது. முகத்தில் உள்ள அழுக்கால் பொலிவான முகம் கிடைக்காது. இதற்கு நாம் இயற்கை முறையில் ஃபேஸ் வாஷ் உபயோகிப்பது சிறந்த வழியாகும்.
நாட்டு மருந்து கடைகளில் பூந்திக்கொட்டை கிடைக்கும். இதை வாங்கி கொள்ளுங்கள். எப்படி இயற்கையான ஃபேஸ் வாஷ் தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு முதலில் 4 பூந்திக்கொட்டை தேவை. இதனை உடைத்தால் உள்ளே பருப்பு இருக்கும் அதனை நீக்கி விடுங்கள். மேலே உள்ள தோல் மட்டுமே நமக்கு தேவைப்படும். பிறகு 3 ஸ்பூன் அளவு பச்சரிசி எடுத்து கொள்ளுங்கள். அதனை 3 முறை தண்ணீரில் அலசி கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பூந்திக்கொட்டைகளை போட்டு அதனுடன் அலசி வைத்துள்ள பச்சரிசியையும் சேர்த்து கொள்ளுங்கள்.
அரிசி வேகும் அளவு தண்ணீர் அதில் இருக்க வேண்டும். சாதமாக வந்தவுடன் அதில் அதிக நுரையும் வரும். தண்ணீரை மட்டும் வடிகட்டி இதனை நன்கு மசித்து கொள்ளுங்கள். மசித்த மாவு பேஸ்ட் பதத்திற்கு வரும். இதனை ஒரு மூடிய கண்ணாடி பாத்திரத்தில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் முகம் கழுவ இதிலிருந்து கொஞ்சம் பேஸ்ட் எடுத்து கொண்டு சென்று முகம் கழுவி வாருங்கள். முகம் பார்ப்பதற்கு அழுக்கில்லாமல் பொலிவாகவும், தெளிவாகவும் இருக்கும்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…