இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். அதிலும், பெரும்பாலானவர்கள் இயற்கையான முறையில் முகத்தின் அழகை மெருகூட்டுவதை தவிர்த்து, கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி தான் பயன்படுத்துகின்றனர். இதனால், நமது சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கெமிக்கல் கலந்த கிரீம்களை நாம் பயன்படுத்துவதால், உடனடியாக முகம் பளபளப்பானாலும் அதன் பின்பு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால், நாம் இயற்கையான முறைகளை பயன்படுத்தும் போது, நமக்கு தீர்வு பொறுமையாக கிடைத்தாலும், அது நிரந்தரமானதாய், பக்க விளைவுகள் இன்றி இருக்கும்.
எனவே இப்படிப்பட்ட கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்த்து, வீட்டிலேயே இயற்கையான முறையில் எப்படி முகத்தை பளபளக்க செய்யலாம் என்பது பற்றி தற்போது இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
தக்காளி, சீனி இந்த இரண்டு பொருட்களுமே நமது வீடுகளில் எப்போதும் இருக்கக் கூடிய ஒன்றுதான். இது மிகவும் விலை குறைவானதும் கூட. தக்காளியை சரி பாதியாக வெட்டிக்கொண்டு, அதனை சீனியை தொட்டு முகத்தில் அந்த சீனி கரையும் வரை நன்கு முகத்தில் தடவி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இப்படி செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, முகம் பளபளப்பாகவும் மாறும். இவ்வாறு நாம் வெளியில் எங்காவது செல்ல வேண்டிய சூழல் இருந்தால், விலை கொடுத்து அழகு நிலையங்களுக்கு சென்று முகத்தை பளபளக்க செய்யாமல், வீட்டிலேயே 30 நிமிடங்களில் நமது முகத்தை நாமே பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த முறை ஆகும்.
தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும், இறந்த செல்களை நீக்கவும் உதவுகிறது. இது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. மேலும், தக்காளியில் உள்ள லிகோபின் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…