அதிகமாக முடி உதிர்கிறதா.? முடி உதிர்வை தடுக்கும் புரோட்டீன் உணவுகள்..
சுறு சுறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சனை எது என்றால் அனைவரும் கூறும் ஒரே பதில் முடி உதிர்தல் தான்.
முடி உதிர்தலை சமாளிக்க பல முறைகளை தேர்வு செய்து பயன்படுத்தி வருகின்றனர். முடி உதிரவதற்கு ஒரு முக்கிய காரணம் உடலில் புரோட்டீன் அளவு குறைவாக இருப்பதுதான் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
முடி உதிர்வை குறைக்கும் 5 புரோட்டீன் உணவு வகைகளை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.
1. மீன் :
- புரதம் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மீன் உணவில் புரதம் ஏராளமாக உள்ளது.
- இது முடி உதிர்வை தடுக்கும்.
- மீன் சாப்பிட்டால் அதில் கிடைக்கும் புரதச்சத்து மூலமாக நமது மயிர் கால்கள் வலுவடையும்.
2. பால் மற்றும் முட்டை :
- பால், தயிர் மற்றும் முட்டை ஆகியவை புரதம் அதிகமுள்ள உணவுகளாகும்.
- தினசரி இவற்றை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.
- இவை முடியின் வேர்களை பலப்படுத்துகிறது.
3. பருப்புகள் :
- அசைவ உணவுகளை விரும்பாத சைவ பிரியர்களுக்கு முடி உதிர்வை தடுப்பதற்கு உதவிகரமாக இருப்பது பருப்புகள் ஆகும்.
- புரதம், ஜிங்க், இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன.
- முடி வலுவிழப்பதை ஃபோலிக் ஆசிட் தடுக்கிறது.
4. சோயா :
- சோயாவில் சுமார் 90 சதவீத புரதம் இருக்கிறது.
- இது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கு தேவையான இரும்புச்சத்து, ஜிங்க், ஃபோலேட் போன்ற சத்துக்களும் உள்ளன.
5. இறைச்சி :
- பலரின் விருப்ப உணவாக இருக்கும் இறைச்சியில் நமது முடி வளர்ச்சி மற்றும் மயிர் கால்களை வலுப்படுத்தும் சத்துக்கள் உள்ளன.
- பிரத்யேகமான இரும்புச் சத்து ஒன்று இறைச்சியில் மட்டுமே இருக்கிறது.
- இது முடி உதிர்வை தடுக்கிறது.