தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டுமா.? இந்த 5 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க…

Topper in Exam

Exam Habits : தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வரும் காலம். இந்த வேளையில் மாணவர்கள் தீவிரமாக தங்கள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதில் அனைத்து மாணவர்களும் முன்பை விட நல்ல மதிப்பெண்கள் பெறுவதை நோக்கி தீவிரமாக படித்து வருகின்றார்.

தேர்வு எழுதி முடிந்த பின்னர், மதிப்பெண்கள் வருகையில் சில நன்றாக படித்த மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்களும், சுமாராக படித்தவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் நிலையும் இதில் வெளியாகும். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் தேர்வு எழுதிய விதம் தான்.

இந்த செய்தி குறிப்பில் ஒரு ஐந்து விஷயங்களை கற்றுக்கொண்டு எவ்வாறு தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

அழகான விடைத்தாள் அணுகுமுறை :

முதல் விஷயம் நமக்குத் தெரிந்த பதில்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் புரியும்படி அதனை எளிதாகவும், அழகாகவும் எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கான பதில்களிலும் தேவையான இடங்களில் சிறு சிறு தலைப்புகள், அந்த தலைப்புகளை வித்தியாசப்படுத்த அனுமதிக்கப்பட்ட வேறுவேறு கலர்கள் கொண்டு அடிக்கோடிட்டு காட்டுதல். இதுதான் பதில் என்றால் அதனை தெளிவாக சுருக்கமாக குறிப்பிட்டு எழுதுதல் ஆகியவை நமது விடைத்தாளை அழகாக்கும்.

கையெழுத்து :

மாணவர்கள் சிலர் நன்கு படிக்கும் மாணவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களின் கையெழுத்து மோசமாக இருக்கும். அவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், அவர்கள் எழுதும்போது அது அவர்களுக்கு மட்டுமே புரியும். அப்படி இருத்தல் கூடாது. ஏனென்றால், உங்கள் விடைத்தாளை நீங்கள் வைத்திருக்க போவதில்லை. அதனை ஆசிரியர்கள் திருத்துவார்கள். ஆதலால், நாமும் நம்முடைய எழுத்து அழகாக இருக்க வேண்டியதில்லை. புரியும்படி இருந்தால் மட்டுமே போதும். இதில் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

முறையான வரிசை :

மூன்றாவதாக வரிசை மாற்றிமாற்றி எழுதுவது அறவே கூடாது. ஏனென்றால், ஆசிரியர்கள் வரிசையாக விடைத்தாள்களில் விடைகளை திருத்திக் கொண்டு வருவார் அப்போது நீங்கள் எனக்கு 10வது கேள்வி நன்றாக தெரியும். பிறகு, 7வது கேள்வி நன்றாக தெரியும். பிறகு 9வது கேள்வி தெரியும். ஒன்றாவது கேள்வி எனக்கு சரியாக தெரியாது அதனால் அதனை கடைசியாக எழுதுகிறேன் என, 10,7,4,1 என மாற்றி மாற்றி எழுதவே கூடாது. அனைத்தும் வரிசையாக மட்டுமே இருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு மூன்றாவது கேள்வி சுத்தமாக தெரியவில்லை என்றால் முதலில் 1,2,4,5 என எழுதிவிட்டு கடைசியாக 3வது கேள்விக்கான விடை எழுதலாம்.

அடித்தல் திருத்தல் :

அடித்தல் திருத்தல் கூடாது. ஒரு கேள்வி எடுத்துக் கொண்டால் அதற்கான பதிலை நீங்கள் சிந்தித்து இதுதான், இந்த பதிலைதான் நாம் எழுத போகிறோம் என்பதை ஒரு சில நிமிடங்களில் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அதற்கு பிறகு அதனை எழுத வேண்டும். ஒருவேளை அதையும் மீறி அடுத்தல் திருத்தல் நிலைமை வந்தால் அதனை ஒரு கோடிட்டு அடித்து காட்டினால் மட்டுமே போதும். அதில் பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்யவே கூடாது. அதேபோல் அதிக அளவு பெயிண்ட் அடிக்கவும் கூடாது.

முக்கியமான தகவல்கள் :

ஐந்தாவது ‘ஹைலைட்’ ஒரு விடைத்தாளில் விடைகளை எழுதும்போது ஒவ்வொரு கேள்விக்கும் தலைப்பு எழுதுகிறோம். அதுபோல, உள்ளே இருக்கும் முக்கியமான சூத்திரங்கள், முக்கியமான பெயர்கள் உள்ளிட்டவைகளை வேறு கலரிலோ, அல்லது அதனை எழுதி அடிக்கோடிட்டோ காட்டலாம். இது ஆசிரியர்கள் திருத்தும் போது முக்கியமான பெயர்கள், இடங்கள், சூத்திரங்களை அவர்கள் எளிதில் புரிந்து கொண்டு உடனடியாக மதிப்பெண் அளித்து அடுத்த பக்கத்துக்கு திருப்பி விடுவார்கள். உங்கள் விடைத்தாளில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து விடுவார்கள்.

கூடுதல் குறிப்பு…

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உங்கள் விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு நீங்கள் அதிகம் வேலை வைக்க கூடாது. அவர்கள் விரைவாக புரிந்து கொண்டு திருத்துவதற்கு என்ன வழிகள் உள்ளதோ அதனை அத்தனையும் உங்கள் விடைத்தாளில் நீங்கள் செய்துவிட வேண்டும். எனக்கு இதெல்லாம் நன்றாக தெரியும். நான் இதை எல்லாம் எழுதி இருக்கிறேன் என்பதை அவர்களுக்கு நீங்கள் புரிய வைத்தால் மட்டுமே போதும். எளிதில் நல்ல மார்க் வாங்கி விடலாம். அதிலும், நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் என்றால், இதனை பாலோ செய்தால் நீங்கள் தான் உங்கள் வகுப்பில் Topperஆக இருப்பீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)