ஈவினிங் ஸ்நாக்ஸ் .. அசத்தலான சுவையில் மசாலா சுண்டல் செய்யலாமா
Evening snacks-அசத்தலான சுவையில் மசாலா சுண்டல் எப்படி செய்யலாம் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்;
- வெள்ளை சுண்டல் =250 கிராம்
- கிராம்பு=2
- ஏலக்காய்= ஒன்று
- பட்டை= ஒன்று
- மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன்
- கடுகு= அரை ஸ்பூன்
- உளுந்து =அரை ஸ்பூன்
- கடலைப்பருப்பு= ஒரு ஸ்பூன்
- வெங்காயம் =3
- பச்சை மிளகாய்=5
- எண்ணெய் = நான்கு ஸ்பூன்
- இஞ்சி= ஒரு துண்டு
- பெருங்காயம்= கால் ஸ்பூன்
- மிளகாய்த்தூள்= அரை ஸ்பூன்
- கறி மசாலாத்தூள்= ஒரு ஸ்பூன்
- தேங்காய் =அரை மூடி [துருவியது]
- சீரகம் =அரை ஸ்பூன்
- கொத்தமல்லி =ஒரு கைப்பிடி அளவு.
செய்முறை ;
சுண்டலை எட்டு மணி நேரம் ஊற வைத்து அதை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் பட்டை ஏலக்காய் ,கிராம்பு சேர்த்து நான்கு விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த பிறகு மஞ்சள் தூள் ,மிளகாய் தூள், கறி மசாலா தூள் சேர்த்து கலந்து விட்டு இஞ்சியை தட்டி சேர்த்துக் கொள்ளவும். இப்போது அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இரண்டு நிமிடம் கழித்து வேக வைத்துள்ள சுண்டலை சேர்த்து கிளறி விடவும்.
மசாலாவில் படும் வரை கிளறிவிட்டு அதில் அரை மூடி தேங்காயை துருவி சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் சுவையான சுண்டல் மசாலா தயாராகிவிடும். குழந்தைகளுக்கு சத்தான மாலை நேர உணவாக கொடுப்பது நல்லது.