முட்டை 65 இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சிக்கன் 65 கூட தோற்றுவிடும்..!
முட்டையை வைத்து பொரியல், அவியல், கிரேவி, குழம்பு என பல வகைகளிலும் ருசித்து இருப்போம், இன்று முட்டையை 65 முறையில் செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- முட்டை =5
- மிளகுத்தூள் =கால் ஸ்பூன்
- மிளகாய் தூள் =1ஸ்பூன்
- காஷ்மீர் மிளகாய்த்தூள் =1ஸ்பூன்
- மஞ்சள்தூள் =கால் ஸ்பூன்
- சோளமாவு =1ஸ்பூன்
- கரம் மசாலா =1ஸ்பூன்
- இஞ்சிபூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன்
- எலுமிச்சை பாதியளவு
- அரிசிமாவு =1ஸ்பூன்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு சிறிதளவு
செய்முறை
ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் லேசாக தடவி முட்டைகளை உடைத்து ஊற்றிக் கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும் ,பிறகு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி முட்டை உடைத்து வைத்துள்ள அந்த பாத்திரத்தை அதன் மேல் வைத்து ஒரு மூடி போட்டு அதை மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
பிறகு அதை சிறு சிறு பீசாக கட் பண்ணி வைக்கவும். ஒரு தட்டில் மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள், சோள மாவு ,அரிசி மாவு, தேவையான அளவு உப்பு ,எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து மீன் பொரிப்பதற்கு மசாலா ரெடி செய்வது போல் செய்து அதிலே பீசாக கட் பண்ணிய முட்டை துண்டுகளை பிரட்டி வைக்கவும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து பொரித்தெடுக்கவும். மசாலா பிரியாமல் வரும். இப்போது மொறு மொறுவென முட்டை 65 ரெடி..
நம் குழந்தைகளுக்கு எப்போது பார்த்தாலும் முட்டை பொரியல், அவியல் போன்ற செய்து கொடுக்காமல் இந்த மாதிரி புதுமையான முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.