Diabetes : வாழைப்பூ சாப்பிடுங்க..! சர்க்கரை நோய்க்கு குட் பை சொல்லுங்க..!

BananaFlower

இன்று பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் வயதினர் கூட இந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது நீரிழிவு பிரச்னை ஏற்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்க வேண்டும். ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரப்பதில் சற்று சிரமம் காணப்படும்.

நீரிழிவின் டைப் 1, டைப் 2 என இரண்டு வகை உள்ளது. டைப் 1 வகை நீரிழிவு பொதுவாக குழந்தை பருவத்தில் அல்லது இளம் வயதிலேயே ஏற்படுகிறது. இது உடலில் இன்சுலின் சுரப்பை குறைக்கிறது. டைப் 2 வகை நீரிழிவு வயது வந்தவர்களுக்கு ஏற்படுகிறது. இது இளம் வயதினரை கூட தாக்குகிறது.

நீரிழிவு நோய் பிரச்னை உள்ளவர்களுக்கு அதிகமான தாகம், அளவுக்கு அதிகமான பசி, எடை இழப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், தலைசுற்றல், சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பூ ஒரு சிறந்த உணவாகும்.

வாழைப்பூவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் வாழைப்பூவை வைத்து கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்

தேவையானவை 

  • பாசிப்பருப்பு – 4 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – ஸ்பூன்
  • மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  • கடுகு – சிறிதளவு
  • வாழைப்பூ – 1
  • பெருங்காயத்தூள் – சிறிதளவு
  • பூண்டு – 5 பல்
  • வெங்காயம் – 1
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கறிவேப்பிலை

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வாழைப்பூவை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி அதில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வேக விட வேண்டும்.

இதற்கிடையில் மிக்ஸியில் துருவிய தேங்காய் அரை கப் பச்சை மிளகாய் 3 சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பூண்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை  பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ, பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பு கலவை கலந்து நன்கு கிளற வேண்டும்.

பின் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து, அரைத்து வைத்துள்ள கலவையை அதனுள் சேர்க்க வேண்டும். பின்பு அதனை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இறக்கிய பின் அதன் மேலாக கொத்தமல்லி தழை தூவி பரிமாற வேண்டும்.

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறையாவது இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதுடன் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
earthquake
jeyakumar TVKVijay
TVK Leader Vijay speech in TVK general committee meeting
thirumavalavan aadhav arjuna
RCB IPL
Aadhav Arjuna