முகம் கறுத்துப் போய் விட்டதா? இந்த ஒரு பொருளை வைத்து ஈஸியா ஃபேஷியல் செய்து பாருங்கள்..!
கறுத்துப்போன முகத்திற்கு இந்த ஒரு பொருளை வைத்து எளிமையாக ஃபேஷியல் செய்து பாருங்கள்.
சிலருக்கு முகம் மிகவும் சோர்வாக தெரியும். காரணம் தினமும் வெளியே சென்று வருவதனால், வெயிலின் தாக்கத்தால் கறுத்துப்போய் இருப்பார்கள். வெள்ளையாக இருப்பவர்களுக்கு கழுத்து, முதுகு, கை, கால் என அனைத்தும் வேறு நிறமாக தெரியும். மாநிறமாக இருப்பவர்களுக்கு மிகவும் முகம் மற்றும் கை, கால்கள் கறுத்துப்போய் வாட்டமாக தெரியும். இது போன்ற நிலைமை உங்களுக்கு இருந்தால் இந்த ஒரு பொருளை வைத்து எளிமையாக ஃபேஷியல் செய்து பளிச்சென்று உங்கள் முகத்தை மாற்றி கொள்ளுங்கள்.
இதற்கு தேவையான பொருள்கள் ஷாம்பூ, 2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால், தேவையான அளவு கான்ஃப்ளார் மாவு. ஷாம்பூ பயன்படுத்துவது உங்களுக்கு ஏதேனும் தொந்தரவாக இருக்கும் என்று நினைத்தால் பேபி ஷாம்புவை பயன்படுத்திக்கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு ஆன்டி டான்ரஃப் ஷாம்பூவாக இருக்கக்கூடாது. மேலும் முடியின் வளர்ச்சிக்கு அல்லது வேறு ஏதும் மருந்திற்காக பயன்படுத்தும் ஷாம்புவாக இருக்க கூடாது. சாதாரண ஷாம்பூவாக இருந்தால் பயன்படுத்தலாம்.
இல்லை என்றால் பேபி ஷாம்பூ பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஷாம்பு பயன்படுத்த விருப்பமில்லாதவர்கள் இதற்கு பதிலாக ரோஸ் வாட்டரை பயன்படுத்திக்கொள்ளலாம். மேற்சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். மாஸ்க் போடுவதற்கு தேவையான கலவை போல் கலந்த பிறகு இதனை பயன்படுத்த வேண்டும். முதலில் உங்கள் முகத்தை நன்கு சுத்தமாக கழுவி விட்டு அதன் பின்னர் நீங்கள் தயாரித்து வைத்துள்ள இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
சீராக முகம் முழுவதும் அப்ளை செய்து பின்னர் பத்து நிமிடம் வரை உலர வைக்கவேண்டும். இது உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் வட்ட வடிவில் மசாஜ் செய்து கொண்டு கழுவி விடுங்கள். நீங்களே நினைத்திராத அளவில் உங்களுடைய முகத்திலிருந்த அழுக்குகள், கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து முகம் திடீரென பொலிவாக இருப்பதை உணர முடியும். அந்த அளவுக்கு பலன் உண்டு. இதனை முகத்திற்கு மட்டுமல்லாது கை, கால்கள், கழுத்து, முதுகு போன்ற கறுத்துப்போன பகுதிகளிலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பு: சென்சிட்டிவ் ஸ்கின் இருப்பவர்கள் இதை பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்துகொண்டு பயன்படுத்த வேண்டும்.