உங்களை குறை சொல்பவர்களுக்கு பதிலடி இப்படி குடுங்க..!

motivation

Motivation-நம்மில் பலரும் விமர்சனங்களுக்கு பயந்து பல காரியங்களை செய்யாமலே போய்விடுவோம் இப்படி நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம்மை குறை சொல்பவர்கள் நம் கூடவே இருப்பவர்கள், சுற்றி இருப்பவர்கள் ,நம் உறவினர்கள் இவர்கள் தான். ஒரு சிலர் கூறும் போது  நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்று  அடிக்கடி கூறும் அந்த நாலு பேரும் இவர்கள்தான்.

உங்களை  பற்றி மகிழ்ச்சியான விமர்சனங்களை கூறினாள் அதை கடந்து போய் விடுவோம் ஆனால் எதிர்மறையான வார்த்தைகளை அவ்வாறு கடந்து போக மாட்டீர்கள் அதை ஒரு ஜெபம் செய்வதுபோல் கூறிக் கொண்டே இருந்து மேலும் உங்களை நீங்களே காயப்படுத்தி கொள்வீர்கள். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஒருவர் உங்களை குறை கூறும் போது நம் இரு காதுகளையும் பயன்படுத்த வேண்டும், அதாவது ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டு விட வேண்டும். கடவுள் உங்களுக்காக கொடுத்த இந்த வாழ்க்கையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ,இந்த வாய்ப்பை மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கக் கூடாது, நிகழ் காலத்தின் மகிமையை உணர்ந்து வாழுங்கள்.

சில பேர் உங்கள் மீது உள்ள பொறாமையின் காரணமாக கூட குறை சொல்வார்கள் அப்போதுதான் உங்களை வீழ்த்த முடியும் என்ற நோக்கத்துடன் இருப்பார்கள். ஆனால் அதற்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்காமல் அதையே யுக்தியாக பயன்படுத்தி மேலும் உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். அவர்களுக்கு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுங்கள்.

மேலும் விமர்சனங்களை கடந்து போவது தான் மிகச் சிறந்த வழி.  உங்களை காயப்படுத்தி பார்ப்பவர்களுக்கு முன் சிரித்துப் பாருங்கள். அவர்கள் அடுத்த முறை உங்களை குறை கூற யோசிப்பார்கள் எனவே குறை கூறுபவர்கள் இடத்தில் உங்கள் இரு காதுகளையும் பயன்படுத்தி ,புன்னகையை பதிலடியாக கொடுங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்