இனிமே கருப்பா இருக்கேன்னு கவலைப்படாதீங்க..! இந்த இரண்டு பொருள் போதும்..! சூப்பர் டிப்ஸ் இதோ ..!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும், பலர் தங்களது முகத்தின் கருமை நிறத்தை போக்க கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர்.
இப்படிப்பட்ட கெமிக்கல் கலந்த கிரீம்களை உபயோகப்படுத்துவதால், நமக்கு பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, பிரச்சனைகளை தான் சந்திக்கிறோம். எனவே, நாம் நமது சருமத்தை பராமரிக்க இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது மிகவும் சிறந்தது.
தேவையானவை
- உருளைக்கிழங்கு – 1
- மஞ்சள் (முகத்தில் போடக்கூடியது) – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை எடுத்து தோலுரித்து கொள்ள வேண்டும். பின் அதனை மிகவும் பொடிதாக சீவிக் கொள்ள வேண்டும். சீவி வைத்துள்ள உருளைக்கிழங்கை கைகளாலேயே பிழிந்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து, அந்த உருளைக்கிழங்கு சாற்றில் மஞ்சள் 2 ஸ்பூன் கலந்து, அந்த கலவையை வாரத்திற்கு 3 முறை முகத்தில் பூசி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முகத்தின் கருமை நிறம் மாறி பளபளப்பாக மாறும்.