இனிமே நல்லா பழுத்த வாழைப்பழத்தை தூக்கி போட்டுறாதிங்க..! அதை வைத்து சூப்பரா அல்வா செய்யலாம்..!
Banana halwa-இனிப்பு வகைகளில் அல்வா ஒரு தனி இடம் பிடித்துள்ளது .அல்வா என்றாலே அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு பண்டம், அதிலும் வாழைப்பழத்தை வைத்து செய்தால் இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்..
தேவையான பொருட்கள்:
- வாழைப்பழம் =3
- சோளமாவு =2ஸ்பூன்
- சர்க்கரை =1 கப்
- நெய் =கால் கப்
- முந்திரி =10-15
செய்முறை:
வாழைப்பழம் மற்றும் கான்பிளவர் மாவை கால் கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரைக்கு கால் கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் பாகு தயார் செய்யவும் .அந்த சர்க்கரை நன்கு கரைந்து தேன் கலர் வரும் வரை வேக விடவும் .இதுதான் நாம் செய்யும் அல்வாவிற்கு ஒரு நல்ல கலரை கொடுக்கும். ஏனென்றால் ஃபுட் கலர் எதுவும் சேர்க்கப் போவதில்லை. கலர் மாறியதும் முக்கால் கப் அளவு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதிலே முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். அதே நெய்யில் அரைத்து வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கெட்டியாகி வாழைப்பழம் பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். கெட்டியான பிறகு சர்க்கரை பாகுவையும் சேர்த்து அந்த சக்கரை பாகுவின் தண்ணீர் வற்றி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி வரவும். கெட்டியான பின் முந்திரியையும் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். அதை தனியே ஒரு வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும் இப்போது சுவையான பனானா அல்வா ரெடி..
நிறைய பேருக்கு நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கு பிடிக்காது உடனே நாம் அதை கீழே தூக்கி போட்டு விடுவோம் அவ்வாறு வீணாக்காமல் இந்த மாதிரி அல்வா செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.