தீபாவளிக்கு இந்த ஸ்வீட்ட மிஸ் பண்ணிராதீங்க ..

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்டாக பாசிப்பயிறு உருண்டை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம் .

pasi payaru urundai (1)

சென்னை –தீபாவளி வேலைகள் இப்போது இருந்தே தடபுடலாக செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்.. அப்படியே உங்க பலகார லிஸ்ட்ல இந்த பாசிப்பயறு உருண்டையை  சேர்த்து செய்து அசத்துங்க..

தேவையான பொருட்கள் ;

  • பாசிப்பயிறு =ஒரு கப்
  • வெல்லம் =முக்கால் கப்
  • சோளமாவு =கால் கப்
  • அரிசிமாவு =முக்கால் கப்
  • தேங்காய் =அரை கப்
  • மஞ்சள் தூள் =அரைக்கப்

green gram (1) (2) (1)

செய்முறை:

முதலில் பாசிப்பயிரை மிதமான தீயில் நன்கு சிவக்க வறுத்து அதிலே மூன்று ஏலக்காயும் சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். பிறகு அதை நைஸ் ஆகவும் இல்லாமல் கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு அதிலே தேங்காய் துருவல் உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இப்போது முக்கால் கப் வெல்லத்தை  கால் கப் தண்ணீர் ஊற்றி பாகு ரெடி செய்யவும் . பாகு  கம்பி பதம்  வர தேவை இல்லை. இப்போது கலந்து வைத்துள்ள மாவின் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறவும். உருண்டை பிடிக்கும் அளவிற்கு பாகுவை ஊற்றி கிளற வேண்டும்.

jaggery (9) (1)

இப்போது அதை உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.  மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, அரை ஸ்பூன் உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் பொரிக்க  தேவையான  அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு மிதமான தீயில் உருண்டைகளை ,கலந்து வைத்துள்ள மாவில் முக்கி பிறகு பொரித்து எடுக்கவும் . இப்போது சுவையான சத்தான  பாசிப்பருப்பு உருண்டை ரெடி.இந்த பாசிப்பருப்பு உருண்டைகள் 15 நாள் வரை கெடாமல் இருக்கும். இதை நாம் தீபாவளி அன்று மட்டும் செய்யாமல் மற்ற நாட்களிலும் தயார் செய்து வைத்துக் கொண்டு பள்ளி  சொல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்