குழந்தைக்கு பால் பற்கள் முளைக்கும் போது அந்த தப்ப மட்டும் செஞ்சுராதீங்க.!
சென்னை : பெரும்பாலான குழந்தைகளின் பற்கள் 4 முதல் 6 மாதங்களுக்குள் வளர தொடங்கும், சிலருக்கு இது முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக, இரண்டு கீழ் முன் பற்கள் முதலில் வளரும், அதைத் தொடர்ந்து நான்கு மேல் முன் பற்கள் முளைக்கும், அதன் பிறகு வாய் முழுவதும் எதிர்பார்க்கலாம். ஆனால் வரிசையில் மாறுபாடுகள் ஏற்படலாம், அதனால் எந்த கவலையும் தேவையில்லை.
குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் பால் பற்கள் தாமதம் ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு 18 மாதங்கள் வரை முதல் பல் வராது, அது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் 18 மாதங்களுக்குள் பற்கள் இல்லாத குழந்தை வாயில் பற்கள் இருப்பதை உறுதிப்படுத்த பல் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
இதை செய்யவே கூடாது
பால் பற்கள் முளைப்பதற்கு நெல் வைத்து கீறி விடுவது ஒரு பழமையான நம்பிக்கை. இது ஒரு கிராமப்புற பழக்கம். இதற்கு அறிவியல் ஆதாரம் கிடையாது, அதனால் அவ்வாறு செய்ய கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எல்லா குழந்தைகளுக்கும் பல் வளரும் போது, அறிகுறிகள் இருக்காது. ஆனால் அவ்வாறு இருப்பவர்களுக்கு, அவர்களின் பால் பற்கள் வருகை முழு துன்பத்தையும் ஏற்படுத்தும்.
முதல் பற்கள் முளைக்கும் அறிகுறிகள் என்னென்ன
ஈறு வீக்கம் :
முதல் பற்கள் முளைக்கும் பொழுது, ஈறுகள் வீங்கி, சிவந்து, தொடுவதற்கு மென்மையாக மாறுவதை நீங்கள் கவனிக்கலாம்.
உமிழ்நீர் :
அந்த பற்கள் வளரும் போது குழைந்தைகளின் வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரக்கும். அந்த நேரங்களில் அதிமாக கோலா வடித்து கொண்டே இருப்பார்கள். இது சில நேரங்களில் கன்னத்தில் அல்லது முகத்தில் சொறி ஏற்படலாம்.
கடித்தல் :
பால் பற்களின் வழியை குறைக்க குழந்தைகள் தங்கள் விரல்கள், பொம்மைகள் அல்லது பிற பொருட்களை மெல்லுவார்கள். இதனால், அந்த வலி சிறிது குறைக்கூடும்.
எரிச்சல் :
பற்கள் தொடர்புடைய அசௌகரியம், குறிப்பாக உணவளிக்கும் போது அல்லது தூங்கும் போது, குழந்தைகளை அதிக எரிச்சலுக்கு ஆளாக்கும்.
தூக்கமின்மை :
அந்த அசௌகரியம் குழந்தைகளை இரவில் அடிக்கடி எழுந்திருக்கச் செய்யலாம் அல்லது தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.
பசியின்மை :
சில குழந்தைகள் தங்கள் ஈறுகளில் உள்ள அசௌகரியம் காரணமாக குறைவாக சாப்பிடலாம்.
குழந்தை குறிப்பாக அசௌகரியமாக இருந்தால், மருத்துவரை அணுகவும். பென்சோகைன் அல்லது லிடோகைன் கொண்ட பல் துலக்கும் ஜெல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.
குறிப்பு : வலிக்கு மருந்துகளை வழங்குவதற்கு முன் எப்போதும் உங்கள் பிள்ளையின் சுகாதார வழங்குநரிடம் கேளுங்கள்.