உங்கள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லையா? அப்ப இந்த குணங்கள் உங்கள் மாமியாரிடம் உள்ளதா?

Default Image

உங்கள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும் குணங்கள்.

இன்று புதிதாக திருமணமாகும் பெண்களின் மத்தியில், மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மாமியார் பிரச்சனை தான். மாமியாரோ அல்லாது மருமகளோ ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் இந்த பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்.

மாமியார்களை பொறுத்தவரையில், அவர்கள் மருமகள்கள் இடத்தில வேற்றுமையை காட்டினால், மாமியாரிடம் இந்த குணங்கள் எல்லாம் காணப்படுவது வழக்கம்.

ஆசைகளுக்கு தடை

பொதுவாக பெண்களை பொறுத்தவரையில், தாங்கள் புதிதாக திருமணமானவுடன், சில ஆசைகளை  வளர்த்து கொள்வதுண்டு. ஆனால், உங்களின் ஆசைகள்  அனைத்திற்கும் உங்களது மாமியார் தடை விதிப்பதை உங்களால் உணர முடியும். அவரது தடைகள் ஒருவேளை கலாச்சரம், ஒரு சில சூழ்நிலைகள் அல்லது குடும்ப மரியாதை சார்ந்து இருக்கும். அவ்வாறு தடை விதிப்பது சில நேரங்களில் நமது நன்மைக்காக கூட இருக்கலாம்.

தாழ்த்தி பேசுதல்

உங்கள் மாமியார்  உங்களை பற்றியோ அல்லது உங்களது தோற்றம் போன்றவற்றை பற்றியோ, எப்போதும் தாழ்த்தி குறை சொல்லிக்கொண்டே இருந்தால், அவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பழக்கம் நீங்கள் உங்கள் மாமியாரை தாயை போல பார்க்கும் பட்சத்தில், இந்த பழக்கத்தில் இருந்து மாற வாய்ப்புள்ளது.

வெளியிடங்களுக்கு அழைத்து செல்லாமை

நீங்கள் ஆசைப்பட்ட இடங்களுக்கோ அல்லது  முக்கிய திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றிற்கு அழைத்து செல்லாமல் இருப்பது  உங்கள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதற்கான அறிகுறிகளாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்