குழந்தைகளுக்கு 6 மாதம் முதலே துணை உணவுகள் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், பழங்கள், காய்கறிகள், புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்கலாம்.
அந்த வகையில், குழந்தைகளுக்கு கொடுக்க மிகசிறந்த பழம் ஆப்பிள். ஆப்பிள் சுவையாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆப்பிளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
ஆப்பிளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, அது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதில் உள்ள நார்சத்து செரிமான பிரச்னைகளை போக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக ஆப்பிளில் உள்ள கார்போஹைட்ரேட் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
6 முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஆப்பிளை கழுவி அதனை சாறு பிழிந்து கொடுக்கலாம் அல்லது ஆப்பிளை அவித்து அதனை குழந்தைகளுக்கு ஊட்டி விடலாம். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு துண்டுகளாக வெட்டி கொடுக்கலாம்.
அதேபோல் ஆப்பிளை வேறு பழங்கள் காய்கறிகளுடன் சேர்த்து சாலட் செய்து கொடுக்கலாம். இந்த பதிவில் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய வகையில் ஆப்பிள் கீர் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஆப்பிளை தோல் நீக்கி, துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி தண்ணீர் விடாமல் கெட்டியாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி அடுப்பில் இருந்து பாலை இறக்கி விட வேண்டும்.
பின்பு கடாயில் நெய் விட்டு முந்திரி மற்றும் ஏலக்காயை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் நெய்யை விட்டு துருவிய ஆப்பிளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஆப்பிளில் உள்ள நீர் வற்றி நன்கு சுருண்டு வந்த பின், ஆப்பிள் மற்றும் ஆறிய பாலுடன் கலந்து, பின் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காயை தூவி பரிமாறலாம்.
இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடலாம். இதனை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் கொடுக்க வேண்டும். ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இவ்வாறு கொடுக்கும்போது அவர்கள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…