முதுகில் கூன் விழுகிறதா.? காரணங்களும்., அதற்கான தீர்வுகளும்..,
கூன் முதுகு விழுவதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வுகளை டாக்டர் கார்த்திகேயன் தனது யூட்யூப் பக்கத்தில் விவரித்துள்ளார்.
கூன் முதுகு விழுவதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வுகளை டாக்டர் கார்த்திகேயன் தனது யூட்யூப் பக்கத்தில் விவரித்துள்ளார்.
சென்னை : வயது கூடும் போது சிலருக்கு கூன் விழும் பிரச்சனை என்பது அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக உயரமாக இருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை அதிகம்எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்சனையை ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சுய சிகிச்சைகளை மேற்கொண்டால் கூன் விழுதல் பிரச்னையில் இருந்து எளிதில் சரி செய்து விட முடியும் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகின்றார்.
காரணங்கள் :
நடக்கும் போதும் அமரும் போதும் முதுகை வளைத்து அமர்வது , எலும்பின் அடர்த்தி குறைவது, முதுகுத்தண்டு எலும்பில் பிராக்சர் ஏற்படுவது ,மற்றும் சிறுவயதிலே முதுகுத்தண்டின் வளைவு ஆகியவற்றால் கூன் விழுகிறது என்றும், இதனை Congenital kyphosis என ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.
கூன் முதுகு விழுவதால் ஏற்படும் பாதிப்புகள் :
கூன் விழுவதினால் நடப்பதற்கு சிரமம் ஏற்படும் மேலும் நுரையீரல் பகுதியை இது குறுக செய்கிறது இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் .அது மட்டுமல்லாமல் கூன் விழுவதால் வயிற்றுப் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதோடு சிறுநீரை அடக்கும் தன்மையும் குறைந்து விடுகிறது.
கூன் விழுவதை முன்கூட்டியே அறிவது எப்படி?
தரையில் நேராக படுத்துக் கொள்ள வேண்டும் .பிறகு உங்கள் இரு கால்களையும்மெது மெதுவாக மடக்க வேண்டும் .இவ்வாறு கால்களை மடக்கும்போது முதுகு பகுதியை உயர்த்த கூடாது. கால்களை மடக்கி கொண்டிருக்கும் பொழுது உங்களது முதுகு பகுதியானது இழுக்கப்படுவது போல் உணர்ந்தால் கூன் விழும் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆரம்ப நிலையிலே சரி செய்ய முயல வேண்டும்.
கூன் முதுகு விழுவதை தடுப்பது எப்படி?
அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தை விட்டு எழுந்து நடக்க வேண்டும். நடக்கும் போதும் உட்காரும்போதும் முதுகு மற்றும் கழுத்து பகுதியை நேராக வைத்து கொள்ள வேண்டும். மேலும் நடக்கும் போது முகத்தை மட்டும் முன்புறமாக வைத்து நடக்கக்கூடாது.
முதுகு பகுதிக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் .தினமும் காலையில் குனிந்து இரு கால்களையும் தொட்டு பிறகு நிமிர வேண்டும் இதுபோல் 21 முறை செய்ய வேண்டும் இதனால் முதுகுத்தண்டு நேராவதோடு ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.பிறகு உங்கள் இரு கைகளையும் மேலே உயர்த்தி பிறகு கீழே விட வேண்டும் இதுபோல் காலை மாலை என தினமும் 15 முறை செய்து வருவதால் கூன் விழுவது தடுக்கப்படுவதோடு ஆரம்ப காலகட்டத்தில் ஏற்படும் கூன் முதுகு சரி செய்யப்படுகிறது.
தூங்கும் போது கால்களை மடக்கி குறுகி படுக்கக் கூடாது. கால்களை நீட்டி நேராக தான் படுக்க வேண்டும். மேலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலையணைகளை வைத்து தலையை மட்டும் உயரமாக வைத்து படுக்கக் கூடாது. இது கழுத்து வலியை ஏற்படுத்துவதோடு முதுகு வலி மற்றும் முதுகு தண்டு வளைவையும் ஏற்படுத்துகிறது. மேலும் கூன் விழுவதால் உடலின் தோற்றம் களை இழந்து காணப்படுகிறது. ஆகவே இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அதனை ஆரம்பகால கட்டத்திலேயே சரி செய்து கொள்வதன் மூலம் வயதான காலகட்டத்தில் முதுகு அதிகம் குனிந்து காணப்படுவது தடுக்கப்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .