உங்க இடுப்பெலும்பு ஸ்ட்ராங் ஆகணுமா?அப்போ இந்த ‘புட்டு’ செஞ்சு பட்டுனு சாப்புடுங்க!

நம் உணவில் உளுந்தம் பருப்பை பல்வேறு வகைகளில் சேர்த்து கொள்கிறோம். இட்லி அரைப்பதற்கும் உளுந்தங்களி செய்வதற்கும் சேர்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று உளுந்தை வைத்து புட்டு செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து=1 கப்
பச்சரிசி=1/2
நாட்டு சக்கரை=
தேவையான அளவு
முந்திரி=10
நெய்=2 ஸ்பூன்
தேங்காய்=1/4கப்
செய்முறை:
கருப்பு உளுந்தையும் பச்சரிசியையும் வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை நன்றாக அரைத்து வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.. பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து ஒரு பத்து நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். வெந்தவுடன் அதில் தேங்காயை சேர்க்கவும். ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரியை சேர்த்து வறுத்து புட்டில் கலந்து அதனுடன் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது சுவையான சத்தான உளுந்து இனிப்பு புட்டு ரெடி.
சைவப்பிரியர்களே.! உங்களுக்கான அசைவ சுவையில் ஒரு சைவ ரெசிபி ரெடி ..
இதில் நெய் கொஞ்சம் சேர்த்து உருண்டையாகவும் பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
உளுந்தில் உள்ள சத்துக்கள்:
கருப்பு உளுந்தல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பி காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் நிறைந்துள்ளது. விட்டமின் ஏ பாஸ்பரஸ்,அயோடின் சோடியம்,, மெக்னீசியம்,சிங்க் மற்றும் நார்ச்சத்தும் புரதச்சத்தும் அதிகம் உள்ளது.
நன்மைகள்:
குழந்தை நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் போது எலும்புகளுக்கு நல்ல வலிமையை கொடுக்கிறது. குறிப்பாக இடுப்பு வலி,கை கால் வலி மூட்டு வலி குணமாகும்.
பெண்கள் பூப்படைந்த காலத்தில் உளுந்தை அதிக அளவு உணவில் கொடுப்பது மிகவும் நல்லதாகும். பிற்காலத்தில் அதாவது கர்ப்ப காலத்தில் பிரசவம் ஏற்படும் போது இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க ஏதுவாக இருக்கிறது.மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. எனவே பெண்கள் உளுந்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில்.
இதயத்திற்கு நல்ல பலத்தை அளிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். கல்லீரல் வீக்கம், ரத்த கசிவு போன்றவற்றை சரி செய்யும்.
எலும்புகளுக்கு வலு சேர்ப்பதில் சிறப்பு வாய்ந்ததாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் அதற்கு வெளியில் கட்டு போட ஒரு சிறந்த மருந்தாகும். மேலும் கால் வீக்கத்தில் மேல் உளுந்தை வறுத்து அரைத்து பற்றாக போட்டால் வீக்கம் வற்றிவிடும்.
உங்க பிரிட்ஜில் இதெல்லாம் வைத்திருக்கிறீர்களா? அப்போ இனிமே வைக்காதீங்க!
ஞாபக சக்திக்கு சிறந்ததாகும். உளுந்தில் தயாரிக்கப்படும் எண்ணெய் பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு கை கால்களில் தேய்ப்பதற்கும், தோல் நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கும் பயன்படுகிறது.
பக்க விளைவுகள் :
என்னதான் உளுந்தில் அதிக நன்மைகள் இருந்தாலும் அதை நாம் அதிகமாக உட்கொள்ளும் போது ஒரு சிலருக்கு பித்த பைகளில் கற்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.
உடலில் யூரிக் அமிலத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. அஜீரணமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
தவிர்க்க வேண்டியவர்கள்:
சிறுநீர் கோளாறு உள்ளவர்கள் மற்றும் கீழ்வாதத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் தவிர்ப்பது நல்லது. ஆகவே நாம் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
லேட்டஸ்ட் செய்திகள்
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025