“ஒரு வார்த்தை நம்மை கொள்ளும் ஒரு வார்த்தை நம்மை வெல்லும்” ஆமாங்க இதுதான் நிதர்சையான உண்மை. இந்த பிரபஞ்சத்திடம் நாம் எதை கேட்கிறோமோ அதைத்தான் கொடுக்கும் அலாவுதீன் கையில் இருக்கும் பூதம் போல். ஆனால் அதை நாம் முறையாக பயன்படுத்துவதில்லை. நாம் நினைப்பதையும் சிந்திப்பதையும் எதிர்மறையாக சிந்திப்பதால் தான் நமக்கு எதுவுமே கிடைப்பதில்லை.
ஒரே விஷயத்தை நாம் திரும்பத் திரும்ப சிந்திக்கும்போது அது நிச்சயம் நடக்கும். அது எதிர்மறையானதாக இருந்தாலும் சரி நேர்மறையானதாக இருந்தாலும் சரி…
நாம் என்றோ நினைத்தது தான் இன்று நம் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் நாம் நன்றாக சிந்தித்துப் பார்த்தால் நமக்கு புரியும். இந்த பிரபஞ்சத்தை பொறுத்தவரை நல்லது, தீயது என கிடையாது. நாம் என்ன கேட்கிறோமோ அதை கொடுத்து விடும். குறிப்பாக நாம் உணர்வு பூர்வமாக ஒரு விஷயத்தைக் கேட்கும் போது அது நிச்சயம் நடக்கும்.
ஆகவே நாம் பேசும் ஒரு சில வார்த்தைகளை நாம் நேர்மறையாக கேட்டால் அது நிச்சயம் கிடைக்கும். உதாரணமாக ஒரு குழந்தையை நடக்கும்போது அதை விழுந்து விடாதே என்று கூறினால், அப்போதுதான் அது விழும் இதுதான் வார்த்தையின் சக்தி அல்லது பிரபஞ்ச சக்தி. எனவே நம் பேசும் வார்த்தைக்கு சக்தி உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தெளிவாக நாம் கூற வேண்டுமென்றால், ராமு சோமு என இரு நண்பர்கள் கடவுளிடம் இவ்வாறு வேண்டிக் கொள்கிறார்கள்.
ராமு கடவுளிடம் தான் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறான். சோமு கடவுளிடம் தான் ஃபெயிலாக கூடாது என்று வேண்டிக் கொள்கிறான். வார்த்தைகள் வெவ்வேறாக இருந்தாலும் ஆனால் இதற்கு பொருள் ஒன்றுதான். வேண்டிக்கொண்டபடி இராமு பரிட்சையில் பாஸ் ஆகி விட்டான். சோமு பெயில் ஆகிவிட்டான்.
இந்த பிரபஞ்சம் பாஸ் என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டு செயல்படுத்தும். மேலும் சோமு கேட்டது ஃபெயில் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு செயல்படுத்தும். இதனால்தான் பிரபஞ்சத்திற்கு நல்லதே கெட்டது என தெரியாது நம் வாயிலிருந்து வரும் வார்த்தையைத்தான் அதை எடுத்துக்கொள்ளும் ஆகவே நாம் கேட்கும் போதே நேர்மறையான வார்த்தைகளை கேட்பது நல்லது.
இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால், நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதும் எனக்கு எந்த நோயும் வரக்கூடாது என்பதற்கும் அர்த்தம் ஒன்றுதான், ஆனால் வார்த்தைகள் வேறு.
நம் ஆரோக்கியத்தை கேட்கும்போது நம் நமக்கு ஆரோக்கியத்தையும், நோய் என்ற வார்த்தை நோயையும் குறித்து இந்த பிரபஞ்சம் எடுத்துக் கொள்ளும். ஆகவே நமக்கு என்ன தேவையோ அதை மட்டுமே இந்த பிரபஞ்சத்திடமோ அல்லது அவரவருக்கு பிடித்த சக்தியிடமோ கேட்டு நேர்மறையாக சிந்தித்து வாழ்வில் .
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…