உங்கள் கூந்தல் நீளமாக வளர வேண்டுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்னை தான். கூந்தல் நீளமாக வளர வேண்டும் எனபதற்காக நாம் பணத்தை செலவழித்து, மருத்துவம் செய்கிறோம். இதனால் நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கூந்தலை நீளமாக வளர செய்ய என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்
புரோட்டின்
முடி வளருவதற்கு புரோட்டின் சத்து மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டின் முட்டையில் மட்டுமன்றி, உருளைக்கிழங்கில் காணப்படுகிறது. எனவே வாரம் ஒருமுறை உருளைக்கிழங்கை வேக வைத்து, அந்த தண்ணீரை கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், இதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
அதிமதுரம்
அதிமதுரத்தை நன்கு பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாக அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலை ஊற்றி, அந்த கலவையை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகமாகி, பொடுகு மறைந்து விடும்.