வெஜிடபிள் புலாவ் டேஸ்ட்டா வரணுமா? அப்போ இது போல செய்ங்க..!
Vegetable pulao-லஞ்சுக்கு ஏற்ற வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி என இப்பதில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்;
- அரிசி= ஒரு கப்
- கிராம்பு= 4
- எண்ணெய் = மூன்று ஸ்பூன்
- நெய் =ஒரு ஸ்பூன்
- பச்சை மிளகாய்= 4
- இஞ்சி பூண்டு பேஸ்ட்= ஒரு ஸ்பூன்
- பட்டை =ஒன்று
- ஏலக்காய்= ஒன்று
- பிரிஞ்சி இலை=ஒன்று
- தக்காளி= ஒன்று
- வெங்காயம்= இரண்டு
- கேரட்= அரை கப்
- பீன்ஸ்= அரை கப்
- உருளைக்கிழங்கு =அரை கப்
- பட்டாணி= கால் கப்
- தேங்காய்ப்பால் =ஒரு கப்
செய்முறை;
அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி அதில் சோம்பு ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்து அதில் எடுத்து வைத்துள்ள காய்கறிகளை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.உப்பும் சேர்த்து கலந்து கொள்ளவும் .
இப்போது ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும், அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய் பாலையும் சேர்த்து கலந்துவிட்டு உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். இப்போது இவற்றை 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து மூடி வைத்து விடவும் 15 நிமிடங்கள் கழித்து கிளறி இறக்கினால் உதிரி உதிரியான வெஜிடபிள் புலாவ் தயாராகி இருக்கும்.
வெஜிடபிள் புலாவ் டேஸ்ட்டா வரணுமா? அப்ப இது போல செய்ங்க..!