முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு போக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க!
முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்குவதற்கான டிப்ஸ்.
இன்று நாம் நாகரீகம் என்கிற பெயரில் பல வகையான கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை தான் விரும்பி சாப்பிடுகிறோம். இன்றைய இளம் தலைமுறையினர் அதிலும் பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது நமது உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து முகத்தில் எண்ணெய் போன்ற தன்மை உருவாகின்றது. இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- முல்தானிமட்டி – ஒரு டீஸ்பூன்
- சந்தனப் பொடி – ஒரு டீஸ்பூன்
- தண்ணீர் – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டியை, ஒரு டீஸ்பூன் சந்தனப் பொடி மற்றும் பன்னீருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை பேஸ்ட் போல கெட்டியாக தயாரித்துக்கொள்ள வேண்டும். நீராக இருக்கக் கூடாது, அதனால் அதற்கேற்ற அளவில் பன்னீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலந்து பின்பு இதனை முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். பின்பு சாதாரண நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்பொழுது முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.