உங்க முதுமையை தள்ளி போடணுமா? அப்போ இந்த உணவுகளை மறக்காமல் சேர்த்துக்கோங்க.!

anti aging food

Anti aging food- என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

இளமையாக இருக்க யாருக்கு தான் பிடிக்காது.முதுமை என்பது ஒரு இயற்கையான விஷயம் அதை தவிர்க்க முடியாது ஆனால் தாமதப்படுத்தலாம் .

தற்போதைய காலகட்டத்தில் மார்க்கெட்டில் கிடைக்கும் பல கிரீம்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.இதனால் சருமம் சேதமடைய தான் செய்கிறது இவ்வாறு செய்வதை தவிர்த்து உணவின் மூலமே நம் முதுமையை தள்ளிப் போட முடியும்.

முதுமை என்பது தோல் சுருக்கமும் வாயில் பற்கள் இல்லாமல் இருப்பதும்தான் என்று பலரும் நினைக்கிறார்கள், அவ்வாறு இல்லை.. நம் உடலில் உள்ள உறுப்புக்களின் செயல்திறன் குறைவதுதான் முதுமையாகும்.

விரைவில் முதுமை அடைய காரணங்கள்:

நம்முடைய மரபணுக்கள் பழுதடைவதை பொருத்துதான் முதுமை விரைவில் எட்டிப் பார்க்கிறது என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. ஸ்ட்ரெஸ், புகைப்பிடித்தல், மது அருந்துதல் ,சுற்றுச்சூழல் மாசுபாடு, வறுத்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது போன்ற காரணத்தால் நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்  அதிகம் உருவாக்கப்படுகிறது.

இதனால்தான் மரபணு சேதம் ஆகிறது. இந்த மரபணுக்களை நாம் சேதம் அடையாமல் பாதுகாத்துக் கொண்டால் முதுமையை தள்ளி போடலாம்.

முதுமையை தள்ளிப் போடும் உணவுகள்:

மாதுளை

மாதுளையில் யுரோலித்தி -ஏ  என்ற ஒரு கெமிக்கல் உள்ளது. இது அணுக்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவை சேதமாகாமல் பாதுகாக்கிறது. மேலும் சருமத்தில் சுருக்கம் வராமலும் பாதுகாக்கிறது.  இதில்  சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்டுகள்  உள்ளது.

பப்பாளி பழம்

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,வைட்டமின் ஈ, வைட்டமின் பி9 அதிகம் உள்ளது. இதில் உள்ள பெப்பையின் என்ற கெமிக்கல் சருமத்தில் கொலாஜின் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இந்த கொலாஜின் தான் சருமத்தை சுருக்கம் வராமல் பாதுகாக்கிறது.

மேலும் லைகோபின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நம் உடலில் உள்ள தேவையற்ற இரும்புச்சத்தை அகற்ற உதவுகிறது. நம் உடலில் அதிக இரும்புச்சத்து இருந்தால் மரபணுக்கள் சேதம் அடையும். மார்பு புற்று நோய்க்கு மிகச்சிறந்த பழம் பப்பாளி பழம் ஆகும்.

கிரீன் டீ

கிரீன் டீயில் பாலி பினால்  என்ற கெமிக்கல் அதிகம் உள்ளது. இது நம் தோல்களில் உள்ள அணுக்களின் உற்பத்திக்கு உதவி செய்கிறது .இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் கொலாஜின் உற்பத்தியை குறையவிடாமல்  தாமதப்படுத்துகிறது.  விட்டமின் ஏ, விட்டமின் இ அதிகம் உள்ளது .இது சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

நாவல் பழம்

நாவல் பழத்தில் அதிக சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் உள்ளது. விட்டமின் சி யும் அதிகம் உள்ளது. நம் தோலில் கரும்புள்ளி மற்றும் பருக்கள் வராமல் பாதுகாக்கிறது. நாவல் பழம் ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையும் கொண்டுள்ளது.

ஆலிவ் ஆயில்

இதில் 73% மோனோ அன்சாச்சுரட்டட் பேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது சருமத்தில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

கருப்பு திராட்சை

கருப்பு திராட்சையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள பழைய அணுக்களை அகற்றி புதிய அணுக்களை உருவாக்குகிறது.

டார்க் சாக்லேட்

டார்ச் சாக்லேட்டில் 50 – 90 % கொக்கைன் பவுடர் உள்ளது. இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் சருமத்தை UV கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது. நீர்ச்சத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது.

நம்முடைய வயதானது நம்மை பார்த்தவுடன் தெரியக்கூடாது நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் .அதனால் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்