puliyotharai
புளியோதரை -கோவிலில் கிடைக்கும் புளியோதரை போல் செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
புளியோதரை பொடி தயாரிக்க
தாளிக்க தேவையானவை
முதலில் சாதத்தை இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கட்டி இல்லாமல் கிளறி ஆற வைத்துக் கொள்ளவும் .புளியையும் ஊறவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிளகு ,சீரகம், எள்ளு, கடுகு, மல்லி, மிளகாய், கருவேப்பிலை சிறிதளவு வெந்தயம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து பவுடர் ஆக்கிக் கொள்ளவும்.
இப்போது மற்றொரு பாத்திரத்தில் ஆறு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து, கடலை பருப்பு சிறிதளவு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் 5 சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையும் சேர்த்து வறுத்து பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.[ இப்படி தண்ணீரில் கரைத்து சேர்க்கும்போது புளியோதரையின் சுவை அதிகமாகும்].
அதனுடன் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் துளையும் சேர்த்து கலந்து இப்போது ஊற வைத்துள்ள புளி கரைசலையும் சேர்த்துக் கொள்ளவும் .தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரையும் சேர்த்து கலந்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும். புளி கரைசல் கெட்டியாகி தேன் பதத்திற்கு வந்த பிறகு புளியோதரை பொடியை இரண்டு ஸ்பூன் சேர்த்து கலந்து விட்டு இரண்டு நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
இப்போது அரை ஸ்பூன் வெல்லம் சேர்த்து இறக்கி விடவும். இந்த புளி கரைசல் ஆரிய பிறகு சாதத்தில் இரண்டு ஸ்பூன் புளியோதரை பொடி சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு புளி கரைசலையும் சேர்த்து கிளறி கொள்ளவும் .இப்போது மணக்க மணக்க கோவில் புளியோதரை தயார். புளியோதரையை எப்போதும் போல் செய்யாமல் எள்ளு, வெல்லம் மற்றும் வெந்தயம் இவற்றை மறக்காமல் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…