கோவில் ஸ்டைல்ல புளியோதரை வேணுமா ?அப்போ இந்த பொருளை சேர்த்துக்கோங்க.!

puliyotharai

புளியோதரை -கோவிலில் கிடைக்கும் புளியோதரை போல் செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்;

  • சாதம்= கால் கிலோ அளவு
  • வெல்லம்= அரை ஸ்பூன்
  • கருவேப்பிலை =சிறிதளவு
  • புளி =பெரிய வெங்காயம் சைஸ் அளவு

புளியோதரை பொடி தயாரிக்க

  • கடுகு= ஒரு ஸ்பூன்
  • மிளகு= ஒரு ஸ்பூன்
  • கடலைப்பருப்பு =ஒரு ஸ்பூன்
  • சீரகம்= ஒரு ஸ்பூன்
  • மல்லி =ஒரு ஸ்பூன்
  • எள்ளு= ஒரு ஸ்பூன்
  • வெந்தயம் =கால் ஸ்பூன்

தாளிக்க தேவையானவை

  • நல்லெண்ணெய் =ஆறு ஸ்பூன்
  • கடுகு =ஒரு ஸ்பூன்
  • உளுந்து= ஒரு ஸ்பூன்
  • கடலைப்பருப்பு= ஒரு ஸ்பூன்
  • வேர்கடலை =ஒரு கைப்பிடி அளவு
  • காய்ந்த மிளகாய் =10
  • பெருங்காயம்= ஒரு ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் =கால் ஸ்பூன்
  • மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன்

sesame seed

செய்முறை;

முதலில் சாதத்தை இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கட்டி இல்லாமல் கிளறி ஆற வைத்துக் கொள்ளவும் .புளியையும் ஊறவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிளகு ,சீரகம், எள்ளு, கடுகு, மல்லி, மிளகாய், கருவேப்பிலை சிறிதளவு வெந்தயம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து பவுடர் ஆக்கிக் கொள்ளவும்.

fenugreek (2)

இப்போது மற்றொரு பாத்திரத்தில் ஆறு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து, கடலை பருப்பு சிறிதளவு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் 5 சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையும் சேர்த்து வறுத்து பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.[ இப்படி தண்ணீரில் கரைத்து சேர்க்கும்போது புளியோதரையின் சுவை அதிகமாகும்].

peanut (1)

அதனுடன் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் துளையும் சேர்த்து கலந்து இப்போது ஊற வைத்துள்ள புளி  கரைசலையும் சேர்த்துக் கொள்ளவும் .தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரையும் சேர்த்து கலந்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும். புளி கரைசல் கெட்டியாகி தேன் பதத்திற்கு வந்த பிறகு புளியோதரை பொடியை இரண்டு ஸ்பூன் சேர்த்து கலந்து விட்டு இரண்டு நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

jaggery (1)

இப்போது அரை ஸ்பூன் வெல்லம்  சேர்த்து இறக்கி விடவும். இந்த புளி கரைசல் ஆரிய பிறகு சாதத்தில் இரண்டு ஸ்பூன் புளியோதரை பொடி சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு புளி கரைசலையும் சேர்த்து கிளறி கொள்ளவும் .இப்போது மணக்க மணக்க கோவில் புளியோதரை தயார். புளியோதரையை எப்போதும் போல் செய்யாமல்  எள்ளு, வெல்லம் மற்றும் வெந்தயம் இவற்றை மறக்காமல் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்