நீங்கள் முடிக்கு டை பயன்படுத்துபவரா? அப்ப உடனே இதை படிங்க!

Default Image

பொதுவாக நமக்கு 40 வயதை தாண்டும் போது, தலையில் அங்கங்கு நரைமுடி தோன்றும். நமது முடி கருமையாக இருப்பதற்கு காரணம், நமது உடலில் சுறாக்கள் கூடிய மெலனின் என்ற நிறமி தான். இந்த நிறமியை 40 வயதிற்கு மேல், ‘டிரையோசின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால், தான் நரைமுடி ஏற்படுகிறது.

இளம் நரை

மிக இளம் வயதிலேயே நரைமுடி ஏற்படுவதற்கு காரணம் தவறான உணவு பழக்கமும், அதிகப்படியான மன அழுத்தமும் தான். தற்போது இந்த பதிவில், தலைமுடிக்கு டை அடிப்பதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

முடி சம்பந்தமான பிரச்சனை

நாம் பயன்படுத்தக் கூடிய டையில், சில்வர், லெட், மெர்குரி போன்ற கெமிக்கல்கள் உள்ளது. இந்த ரசாயனம் கலந்த சாயத்தை முடிக்கு பூசும் போது, கூந்தல் வறட்சி, முடி உடைதல், பொடுகு, இளநரை மற்றும் வழுக்கை போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

கண் பிரச்சனை

நம் அடிக்கடி இந்த டையை பயன்படுத்தும் போது, நெற்றி மற்றும் முகத்தில் அலட்சியை ஏற்படுத்துகிறது. மேலும், இதனை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் போது, கண் பார்வை கூட பறிபோக கூடிய மோசமான நிலைக்கு ஆளாக்கி விடுகிறது.

புற்றுநோய்

இந்த டையை பயன்படுத்தும் போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், உடனடியாக அதனை நிறுத்தி விட வேண்டும். மேலும், இதனை பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளதாக ஆய்வில்  தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்