தினமும் ஒரே பருப்பில் சாம்பார் செய்கிறீர்களா.? இதோ அதற்கான மாற்றுத் தீர்வு ரெடி…

Sambar

எப்போது பார்த்தாலும் பருப்பு சாம்பார் என பல குடும்பங்களில் முதல் உணவாக உள்ளது. நாம் ஒரே வகையான பருப்புகளை உபயோகிக்கும் போது உடலில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அதற்கு மாற்றாக நாம் என்ன பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

காலையில் இட்லியில் தொடங்கி மதியம் சாம்பார், இரவு சப்பாத்திக்கு சாம்பார் என்று பல குடும்பங்களில் உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஒரே பருப்பில் செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் விருந்து நிகழ்ச்சிகளிலும் நம் தென்னிந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத ஒன்று பருப்பு சாம்பார்.

பருப்பில்  பிரச்சனை இல்லை ஆனால் இங்கு நாம் ஒரே வகையான பருப்பை தான் பயன்படுத்துகிறோம். இதிலும் குறிப்பாக துவரம் பருப்பு தான் 90 சதவீதம் மெஜாரிட்டியாக உள்ளது.

ஒரே பருப்பை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் உடல் பருமன், வாயு தொந்தரவு,அதிக படியான  புரதம் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் துவரம் பருப்பின் விலையும் ஏற்றப்படுகிறது. நாம் ஒரே பருப்பை வாங்கும் போது அதன் பற்றாக்குறை ஏற்படுகிறது இதனால் விலை ஏற்றப்படுகிறது. இதற்கு மாறாக  பல சத்தான பருப்புகள்  உள்ளது.

கொள்ளு பருப்பு

இந்தப் பருப்பை நாம் வாரம் இரண்டு முறை  பயன்படுத்த வேண்டும் இதனால் நம் உடம்பில் உள்ள கொழுப்பு குறைக்கப்படுகிறது. உடல் எடையும் குறைக்கப்படுகிறது. இந்தக் கொள்ளு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் சூட்டை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க கொள்ளு பயன்படுத்தும் போது நீர் காய்கறிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

அவரைப் பரப்பு

இதுவும் துவரப்பருப்புக்கு இணையான சத்துக்களை கொண்டுள்ளது. இந்தப் பருப்பு அதிகம் பயன்படுத்தும் போது வாய் தொந்தரவை ஏற்படுத்தும் இதனால் வாரம் ஒரு முறை பயன்படுத்துவது சிறந்தது. இந்த பருப்பை வேகவைக்கும் போது முழு பூண்டை சேர்த்து வேக வைக்க வேண்டும்.

தட்டைப் பயிறு

பெரும்பாலும் மக்களிடையே பயன்படுத்தப்படாத ஒரு பருப்பு வகை இந்த தட்டைப் பயிர் தான். ஆனால் துவரம் பருப்பை விட அதிக சத்துக்களை கொண்டது விலை குறைவானது. அதுமட்டுமில்லாமல் மிகவும் சுவையானது மனம் உள்ளது. இதனை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது மூட்டுவாதம் தடுக்கிறது. வாரத்திற்கு ஒரு முறையேனும் நம் உணவில் பயன்படுத்த வேண்டும்.

பாசிப்பயிறு

பாசிப்பயறில் அதிகப்படியான நல்ல புரதங்களைக் கொண்டுள்ளது. மேலும் போலிக்  ஆசிட், விட்டமின்ஸ், நிறைந்துள்ளது. இதன் மேல் தோலில் கரோட்டின் சத்து காணப்படும். அதனால் அதன் தோலை நீக்காமல் நாம் சமைத்து உண்ண வேண்டும்.

ஆகவே இந்த பதிவை நீங்கள் அறிந்த பிறகு உங்கள் மளிகை குறிப்பில் ஒரு கிலோ துவரம் பருப்பை அரை கிலோவாக குறைத்து மீதம்  அரை கிலோ இந்த பருப்பு வகைகளை நாம் உணவில் எடுத்துக்கொண்டு பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்