வாய்வு தொல்லைகளால் அவதிப்படுறீங்களா? இதோ உங்களுக்கான தீர்வு ரெடி….
நம் உடம்பில் உள்ள உணவுகளை வாயுக்கள் தான் மற்ற உறுப்புகளுக்கு தள்ளும் பணியை செய்கிறது. அதுவே அழகுக்கு மீறினால் நஞ்சாகிறது.
“வாய்வு இல்லாமல் வாதம் வராது ” வாய்வை அலட்சியப்படுத்துவது மிகவும் தவறு. அதனால் பல்வேறு விளைவுகளை நாம் சந்திப்போம். அதாவது மூட்டு வலி, வாதம்,வயிற்றுப்புண்போன்றவை ஏற்படும். உடலில் செரிமானம் நடக்கவில்லை என்றால் போதிய அளவு சத்து நமக்கு கிடைக்காது.
கண்டறிவது எப்படி:
சாப்பிட்ட உடன் தொடர் ஏப்பம், அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு வருவது, பசியின்மை மலச்சிக்கல் போன்றவை ஆகும்.
காரணங்கள்:
- சரியான நேரத்தில் சரியான உணவை எடுக்காமல் இருப்பது.
- உழைப்பிற்கு தகுந்த உணவை எடுக்காமல் இருப்பது. மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள், காரமான உணவு வகைகளை எடுப்பது,பசிக்கும்போது சாப்பிடாமல் இருப்பது, வலி மாத்திரைகளை அதிக அளவு எடுப்பது, புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துவது, உடல் வலி, விதைப்பை வலி போன்றவைகள் ஆகும்.
சரி செய்யும் முறை:
- மோரில் பெருங்காயம் கலந்து சாப்பிடவும்.
- புதினா சட்னி அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
- சீரகத் தண்ணீர் குடிப்பது அதாவது சீரகத்தை வறுத்து அதை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை பருகவும். சீரகம் அகத்தை சீர்படுத்தும். அகம் என்றால் உடலாகும்.
வாயு சூரணம் செய்தும் சாப்பிடலாம்.எப்படி செய்வது னு பார்ப்போம் ;
இந்து உப்பு,பூண்டு, பெருங்காயம், சீரகம், ஓமம்,சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒரு ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதை பவுடர் ஆக்கி ஒரு கண்ணாடி பாட்டில் காற்று புகாதவாறு வைத்துக் கொள்ளவும்.
வாயு தொல்லை இருக்கும் போது கால் டீஸ்பூன் எடுத்து எலுமிச்சை சாறு நான்கு,ஐந்து சொட்டுகள் விட்டு சுண்டக்காய் அளவு உருட்டி சாப்பிட்டு வர வாயுத்தொல்லை நீங்கும்.
அல்சர் மட்டும் எரிச்சல் உள்ளவர்கள் எலுமிச்சைக்கு பதில் தேன் கலந்து சாப்பிடவும். இதை காலை இரவு உணவுக்குப் பின் எடுத்து வரவும். இது ஒரு மிகச்சிறந்த ஜீரணம் ஏற்றி மற்றும் வாயு அகற்றியாகும்.
ஆங்கில மருந்து எடுப்பவர்கள் ஒரு மணி நேரம் கழித்து எடுத்துக் கொள்ளவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் :
உருளை கிழங்கு, வாழைக்காய், மொச்சை, பட்டாணி மற்றும் பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளை தவிர்க்கவேண்டும் .உருளை கிழங்கில் கிளைசீமிக் உள்ளதால் சர்க்கரைநோய் வரும் .
ஒருவேளை சாப்பிட வேண்டிய சூழ்நிலை வந்தால் இஞ்சி பூண்டு புதினா சீரகம் இவற்றில் ஏதாவது சேர்த்து சாப்பிடவும் .
தொட்டதற்கெல்லாம் மாத்திரைகள் எடுப்பதை தவிர்த்து இந்த முறைகளை பயன்படுத்தி பயன்பெறுவோம்.