பொடுகு தொல்லையால் கஷ்டப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!
இன்றைய இளம் தலைமுறையினர் அனைவருமே தங்களது கூந்தலை பராமரிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக இவர்கள் அதிகமான பணத்தை செலவழித்து செயற்கையான முறையில் மருத்துவம் மேற்கொள்கின்றனர். இந்த வழிகள் நமக்கு பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது.
தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- மரிக்கொழுந்து – 1 கப்
- வெந்தயக்கீரை – அரை கப்
செய்முறை
ஒரு கப் மாரி கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட வேண்டும். இவ்வாறு செய்து 10 நிமிடங்கள் கழித்து தலையை நன்கு அலச வேண்டும். இவவாறு செய்து வந்தால், பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
இழுப்பை புண்ணாக்கு
இலுப்பை புண்ணாக்கு நாட்டு மருந்து கடைகளில் மிக எளிதாக கிடைக்கும். இந்த புண்ணாக்கை வாங்கி பொடித்து, நீரில் இட்டு நன்றாக கலக்க வேண்டும். அதன் பின் இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.