நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படின்னு தெரியுமா?
இன்றைய சூழலில் இதய நோய் என்பது ஒரு சாதாரண மான ஒன்றாக உள்ளது.. இருந்தாலும் நாம் நம்மை பேணிக் காத்து பாதுகாப்பாக வாழ்வது மிகவும் அவசியமாகும். எனவே எப்படி பாதுகாப்பது என்று இந்த பதிவில் காணலாம்.
நாம் ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது மூன்று வேளை என்பதை ஆறு வேலையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். உதாரணமாக காலை உணவின் கணக்குப்படி நான்கு இட்லி என்பதை பிரித்து 7.30 இரண்டு இட்லியும் 9:30 க்கு இரண்டு இட்லியும் எடுத்துக்கொள்ள பழக வேண்டும்.
தாவர வகையில் இருந்து பெறப்பட்ட எண்ணையை பயன்படுத்துவது சிறந்தது. ஒமேகா 3 நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது இதயத்திற்கு பலத்தை கொடுக்கும். மீன்,பாதாம் பருப்பு போன்றவற்றில் அதிகம் ஒமேகா-3 காணப்படுகிறது.
தினமும் ஒரு ஆப்பிள் எடுத்துக் கொள்வது சிறந்தது. சிட்ரிக் பழ வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வது சிறந்தது. ஆரஞ்சு நெல்லிக்காய், கருப்பு திராட்சை, பைனாப்பிள் போன்றவற்றில் நைட்ரிக் ஆசிட் அதிகம் உள்ளது. சிவப்பு வகை பழங்கள் காய்கறிகள் இதயத்திற்கு சிறந்த உணவாகும். பீட்ரூட் ஜூஸ் 100 ml வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக் கொள்வது நல்லது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் தினமும் சாப்பிடுவது நல்லது ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியம் ரத்த குழாய்களை விரிவடைய செய்யும். கொழுப்பு இல்லாத பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து சாப்பிடுவது சிறந்தது. மேலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொண்டால் உடம்பில் கொழுப்பு படிவதை தவிர்க்கலாம். முழு தானியங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
தயிர் மற்றும் மோரில் ப்ரோ பையாட்டிக் இருப்பதால் குறைந்த அளவில் தினமும் எடுத்துக் கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக்கரு எடுத்துக் கொள்வது சிறந்தது. முட்டையில் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் உள்ளதால் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே எடுத்துக்கொள்வது போதுமானதாகும். ஒரு நாளுக்கு நான்கு ஸ்பூன் எண்ணெய் நம் உடலுக்கு போதுமானதாகும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. எருமைப்பால், வெண்ணெய்,டால்டா தேங்காய்,ஊறுகாய் பாலாடை கட்டி, வேர்க்கடலை, மற்றும் அசைவ உணவான பன்றி கறி ஆட்டு இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு அதிகம் உள்ளது.
முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது வேண்டுமென்றால் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.
மருந்து மாத்திரை மட்டுமே நம்மை பாதுகாக்கும் என்பது தவறான ஒன்றாகும். போதுமான உடல் உழைப்பு மற்றும் ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வதும் தவிர்க்க வேண்டியதை மிகக் குறைவான அளவில் எடுத்துக் கொள்வதும் சிறந்தது அல்லது தவிர்ப்பதும் சிறந்தது.