உங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா..? அப்ப வாழைப்பழம் சாப்பிடுங்க..!
சிறுநீரகம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழைப்பழம்.
வாழைப்பழத்தை பொறுத்தவரையில், நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாழைப்பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் வைட்டமின் சி, உணவு நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் நிறைந்துள்ளது. வாழைப்பழம் கொழுப்பு இல்லாததாகவும், கொலஸ்ட்ரால் இல்லாததாகவும் கருதப்படுகிறது.
செரிமானம்
வாழைப்பழத்தில் நீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை சீர்படுத்துகிறது. வாழைப்பழம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்தில் 10% வழங்குகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால், ஜீரண சக்தி அதிமுகமாவதுடன், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
சிறுநீரக ஆரோக்கியம்
நமது உடலில் சிறுநீரகம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், சிறுநீரக பிரச்னை ஏற்படாமல் தடுப்பதில், வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், மினரல் நிறைந்துள்ளது. பொட்டாசியம் உடலில் திரவ அளவை பராமரிக்க உதவுகிறது மற்றும் செல்கள் மற்றும் செல்களுக்கு வெளியே ஊட்டச்சத்துக்கள் மற்றும் கழிவுப்பொருட்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. பொட்டாசியம் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஆற்றல் அதிகரிப்பு
வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம், உடலில் ஆற்றல் கிடைக்கும். வாழைப்பழத்தில் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகிய மூன்று இயற்கை சர்க்கரைகள் உள்ளன, அவை உடலுக்கு கொழுப்பு இல்லாத, கொலஸ்ட்ரால் இல்லாத ஆற்றலை வழங்குகிறது.
இரத்த சோகை
வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால், ரத்தசோகை பிரச்சனை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். எனவே வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.