லைஃப்ஸ்டைல்

Piles : உங்களுக்கு இந்த பிரச்னை உள்ளதா..? அப்ப இதை கண்டிப்பா படிங்க..!

Published by
லீனா

மூலம் (Piles) என்பது ஆசனவாயின் உட்புற அல்லது வெளிப்புற திசுக்களில் வீக்கம் ஏற்படுவது ஆகும். இது ரத்த நாளங்கள் வீக்கமடைந்து, திசுக்களின் வழியே தள்ளப்படுவதால் ஏற்படக்கூடிய ஒரு பிரச்னை ஆகும். மூலம் பிரச்சனை இரண்டு வகைப்படும். அவை, உள் மூலம், வெளி மூலம் ஆகும்.

அறிகுறிகள் 

மூலம் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆசனவாயில் வலி அல்லது அரிப்பு ஏற்படலாம். இந்த வலி மற்றும் அரிப்பு மலம் கழிக்கும் போது அவர்களுக்கு சில மோசமான சூழ்நிலைகளை ஏற்படுத்தலாம். மூலம் பிரச்சனை உள்ளவர்களுக்கு  மலச்சிக்கலுடன் சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் ரத்தப்போக்கு ஏற்படலாம்.

தீவிரமான வலி, ரத்தப்போக்கு, சீழ்க்கட்டி, ஆசனவாய் புண் போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

செய்ய வேண்டியவை 

மூலம் பிரச்சனை உள்ளவர்கள், ஆசனவாயில் ஐஸ் பேக் வைக்கலாம், ஆசனவாயில் மலமிளக்கியை தடவலாம், ஃபைபர் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம், போதுமான அளவு திரவங்கள் அருந்த வேண்டும். மூலத்தை சரிசெய்ய பல சிகிச்சைகள் உள்ளது. வீட்டு வைத்தியம், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

சாப்பிட வேண்டிய உணவுகள் 

மூலம் பிரச்சனை உள்ளவர்கள் ஆப்பிள், பேரிக்காய், அன்னாசி, பிளம்ஸ், பீன்ஸ், பட்டாணி, ப்ரோக்கோலி, கேரட், முட்டைக்கோஸ், வெள்ளரி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்ற ஃபைபர் நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம்.

ஓட்ஸ், கம்பு, பழுப்பு அரிசி, கோதுமை தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற முழு தானியங்களை சாப்பிடலாம். பீன்ஸ், பட்டாணி மற்றும் லெண்டில்ஸ் போன்ற பருப்பு வகைகளை சாப்பிடலாம்.

சாப்பிட கூடாத உணவுகள் 

ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் மலச்சிக்கலை ஏற்படுத்தும், இது மூலத்தின் அறிகுறிகளை மோசமாக்கும். காபி மற்றும் தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.  வறுத்த உணவுகள் மற்றும் காரமான உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். பால் மற்றும் பால் பொருட்கள் சிலருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் அதனையும் தவிர்க்க வேண்டும்.

மூலத்தை தவிர்க்க சில குறிப்புகள் 

மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்ததும் மலம் கழிக்க வேண்டும். மலம் கழிக்க நீண்ட நேரம் காத்திருப்பது மலசிக்கல் பிரச்னையை ஏற்படுத்தும். மலம் கழிக்கும் போது அதிக அழுத்தம் கொடுப்பது, மூலம் சம்பந்தமான பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

மேற்கண்ட செயல்முறைகளை கையாண்டால் மூலம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ளலாம்.

Published by
லீனா

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

5 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

8 hours ago