உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? அப்போ இந்த பதிவ படிங்க..!
Oily skin-நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும், அதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அதிக சரும பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் ,மற்ற சருமங்களை விட இவர்களுக்கு கூடுதல் பராமரிப்பு கொடுக்க வேண்டும் . அதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
எண்ணெய் சருமத்தால் உள்ள நன்மைகள்:
- ஆயில் ஸ்கின் இருப்பவர்களுக்கு முகம் விரைவில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கும் ஏனென்றால் இயற்கையாகவே அவர்களுக்கு சர்மம் ஈரப்பதமாக இருக்கும் இது ஒரு வரப் பிரசாதம் கூட கூறலாம்.
- ஆனால் இந்த சருமம் உள்ளவர்களுக்கு அதிக நேரம் மேக்கப் நிற்காது . குளித்த சிறிது நேரத்திலேயே எண்ணெய் வடிந்தது போல் இருக்கும் மேலும் முகப்பரு,கரும்புள்ளி அதிகமாக வரும்.
எண்ணெய் பசையை கட்டுக்குள் வைக்க குறிப்புகள்:
- சுடு தண்ணீர் மற்றும் மிகக் குளிர்ந்த நீரை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
- அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளான ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும் .இதனால் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக சுரக்கும். மேலும் சரும துளைகளையும் ஏற்படுத்தும்.
- எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- தினமும் எண்ணெய் இல்லாத மாய்சராய்ஸ்களை முகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
- எண்ணெய் சருமத்திற்கு முல்தானி மட்டி ஒரு சிறந்த ஃபேஸ் பேக் ஆகும். வாரத்தில் மூன்று நாள் ஆவது முல்தானிமட்டி, பச்சைப்பயிறு போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் உங்கள் முக அழகை மிளிரச் செய்யலாம் .
எண்ணெய் பசை சருமத்திற்கு சிறந்த ஃபேஸ் பேக்:
- முட்டையின் வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இது அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை கட்டுக்குள் வைக்கும்.
- ஓட்ஸ் 2 ஸ்பூன், தேன் இரண்டு ஸ்பூன் ,லெமன் ஒரு ஸ்பூன் இவற்றை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து லேசாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
- கற்றாழை ஜெல்லை நன்கு கழிவு விட்டு முகத்தில் பயன்படுத்தி வரலாம். இது சிறந்த இயற்கையான மாய்சரைஸராகவும் அதிக எண்ணெய்பசையை கட்டுக்குள் வைக்கும்.
எனவே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்தக் குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் சர்ம அழகை மிளிரச் செய்யுங்கள்.