உங்கள் வீட்டில் வாழைப்பழம் உள்ளதா..? அப்ப இந்த அசத்தலான ரெசிபியை செய்து பாருங்க…!

banana puttu

வாழைப்பழத்தை வைத்து அசத்தத்தாலான வாழைப்பழ புட்டு செய்யும் முறை. 

நம்மில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் வாழைப்பழம் என்றால் பிடிக்க தான் செய்யும். வாழைப்பழத்தை  வகையான உணவுகள் செய்தாலும், பலருக்கு இந்த வாழைப்பழத்தை வைத்து எப்படி சாப்பாடு செய்வது என பலருக்கு குழப்பம் ஏற்படுவது உண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், வாழைப்பழத்தை வைத்து செய்யக் கூடிய அசத்தலான ரெசிபி பார்ப்போம்.

வாழைப்பழ புட்டு

 தேவையானவை 

  • 4 வாழைப்பழம் நறுக்கியது
  • ½ கப் சர்க்கரை
  • ½ கப் வெல்லம்
  • 1 ½ கப் துருவிய தேங்காய்
  • 2 கப் புட்டு மாவு
  • உப்பு சிறிதளவு
  • சுடு தண்ணீர் தேவையான அளவு

செய்முறை 

bananaputtu
bananaputtu [imagesource : Representative]

முதலில் வாழைப்பழத்தை எடுத்து தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் அரை கப் சர்க்கரை, அரைக்கப் வெல்லம் மற்றும் ஒன்றரை கப் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்கு புட்டு மாவு சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து சூடான நீரை சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவை திருத்திருவன பிசைந்து கொள்ள வேண்டும்.

அதாவது புட்டு மாவை பொருத்தவரை கையில் பிடித்தால் மாவு உதிராமல் இருக்க வேண்டும். ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதித்து வந்த பின், பாத்திரத்தின் அடித்தட்டை வைத்து இரண்டு கிண்ணங்களை எடுத்து அதில் எண்ணெயை தடவி அதன் அடிப்பகுதியில் சிறிதளவு வாழைப்பழத்தை போட்டு, அதன் மீது சிறிது புட்டு மாவை சேர்த்து அதன் மேல் மறுபடியும் வாழைப்பழத்தை பரப்பி வைத்து இரண்டு கிண்ணத்தையும் இட்லி பாத்திரத்தில் வைத்து அவிக்க வேண்டும். 10 நிமிடம் வேகவிட்டு அடுப்பில் இருந்து இறக்கிக்கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான வாழைப்பழ புட்டு தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்