உங்க வீட்ல பிரட் இருக்கா? அப்ப இதை செய்து பாருங்க…!
நாம் பிரட்டை பயன்படுத்தி பல விதமான உணவுகளை செய்து சாப்பிட்டிருப்போம். அதே பிரட்டை பயன்படுத்தி, பிரட் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நாம் பிரட்டை பயன்படுத்தி பல விதமான உணவுகளை செய்து சாப்பிட்டிருப்போம். தற்போது இந்த பதிவில் அதே பிரட்டை பயன்படுத்தி, வித்தியாசமான முறையில் பிரட் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பிரவுன் பிரட் 3
- பெரிய வெங்காயம் 2 நறுக்கியது
- பச்சை மிளகாய் 2 நறுக்கியது
- தக்காளி ஒன்று நறுக்கிய
- கொத்தமல்லி இலை நறுக்கிய
- இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி
- உப்பு தேவையான அளவு
- மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
- சோயா சாஸ் ஒரு தேக்கரண்டி
- சில்லி சாஸ் ஒரு தேக்கரண்டி
- முட்டை 3
- எண்ணெய் 2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். பிரௌன் பிரட்டை எடுத்து சிறுசிறு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி இலை, அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் சோயா சாஸ், ஒரு டீஸ்பூன் சில்லி சாஸ் ஊற்றி எல்லாவற்றையும் கலந்து நன்கு கலவையாக செய்து கொள்ள வேண்டும்.
பின் அதில் மூன்று முட்டையை உடைத்து ஊற்றி தனை நன்கு கலக்க வேண்டும். அதன் பின் ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை வாணலியில் ஊறுவதற்கு முன்பதாக நறுக்கி வைத்துள்ள பிரெட்டை கலவையில் கலந்து கொள்ள வேண்டும்.
பின் இரண்டையும் நன்கு கலந்து அதன் பின்னர் வாணலியில் போட வேண்டும். அதனை மெதுவாக கிளறி விட வேண்டும். முட்டை பொரிந்து பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். இப்போது சுவையான பிரட் பொரியல் தயார்.