உங்க வீட்ல முந்திரி இருக்கா? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்க!
நாம்மில் சிறியவர்கள் முதல் பெரியாவர்காள் வரை அனைவருமே முந்திரியை வ்விரும்பி சாப்பிடுவதுண்டு. அதனை நாம் பல வகையான உணவுகளை செய்யவும் பயன்படுத்துகிறோம்.
தற்போது இந்த பதிவில், முந்திரியை பயன்படுத்தி காஜ் கத்லி என்ற வித்தியாசமான சுவையான சுவீட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- முழு முந்திரி – ஒரு கப்
- நெய் – 2 டேபிஸ்பூன்
- சர்க்கரை – ஒரு கப்
செய்முறை
முதலில் முந்திரியை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, நெய் சேர்த்து சூடானதும் அரைத்த முந்திரி விழுதை சேர்க்க வேண்டும்.
பின் சர்க்கரை சேர்த்து கை விடாமல் கிளற வேண்டும். சிறிது நேரத்தில் வெந்து சுருண்டு வரும் சமயம் அடுப்பை அணைத்து விட வேண்டும். பின் இந்த கலவையை சப்பாத்தி மாவு போல தேய்த்து, டைமண்ட் வடிவத்தில் வெட்டி, பரிமாற வேண்டும்.