உங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டர் உள்ளதா? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!
அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. கேஸ் சிலிண்டரை பயன்படுத்த தெளிவான வழிமுறைகளை தெரிந்த பின்புதான் பயன்படுத்த வேண்டும்.
நாம் மண்ணெண்ணெய் அடுப்புகள், விறகு அடுப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் காலங்கள் முடிந்து, தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், கேஸ் அடுப்பை பயன்படுத்தும் போது நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என நன்கு தெரியாவிட்டால் அது பலவித ஆபத்துகளையும், இறுதியில் உயிரையே பறிக்கும் அபாயம் வரை கொண்டு போய் விட்டுவிடும். கேஸ் சிலிண்டரை பயன்படுத்த தெளிவான வழிமுறைகளை தெரிந்த பின்புதான் பயன்படுத்த வேண்டும்.
அந்த வகையில் சமையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்பு பெறுபவர்களாக இருந்தால், சமையல் கேஸ் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி சிலிண்டர் வினியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவ்வாறு தெரிந்து கொள்ளும் பட்சத்தில் தான் நாம் பாதுகாப்பான முறையில் அந்த சிலிண்டரை பயன்படுத்த முடியும்.
சிலிண்டரை வெப்பமான பிற பொருட்களில் இருந்து சில அடிகள் தள்ளி வைத்திருப்பது நல்லது. சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது வேறு எவ்வித நெருப்பு பற்ற கூடிய பொருட்களையும் வைத்து பயன்படுத்தக்கூடாது.
சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். சிலிண்டரில் கசிவு இருப்பதாக தென்பட்டால் உடனடியாக சோப்பு நீர் கலந்து சிலிண்டர் மீது ஊற்றினால், நீர்க்குமிழ் உருவாகும். இதை கொண்டு எரிவாயுவை பரிசோதிக்க முடியும். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்க கூடாது இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடிகள் எப்போதும் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். திடீரென கேஸ் கசிவு ஏற்படும் பட்சத்தில், அந்த பாதுகாப்பு மூடியால் வால்வை மூடிக்கொள்ள வேண்டும்.