இந்த ஜூஸை குடித்தால் முகப்பரு நீங்குமா?
செயற்கையான இனிப்பு எதுவும் சேர்க்காமல் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டு தித்திக்கும் இந்த பானம் நம் அனைவருக்கும் தெரிந்த கரும்பு சாறு.இந்த சாற்றில் 15 சதவீதம் இயற்கையான சர்க்கரையும் வைட்டமின்களும் ஆர்கானிக் உப்பும் நிறைந்துள்ளது.
இத்தகைய இந்த கருப்பு சாற்றில் ஏராளமான நன்மைகள் உள்ளன.கரும்பில் கிளைக்கோலிக் அமிலங்கள்,வைட்டமின்கள்,அதிக அளவிலான கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
நாம் முகத்தில் உள்ள பருக்களை நீக்க பல முயற்சிகளை எடுக்கிறோம்.கடையில் விற்கும் பொருளையோ அல்லது வீட்டிலே ஒரு பொருளை தயாரித்தோ முகத்தில் பயன்படுத்துவோம்.ஆனால் கரும்பு சாறு முகப்பருவை சரிசெய்யும் என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
இந்த கரும்பு சாற்றில் உள்ள கிளைக்கோலிக் அமிலங்கள் முகத்தில் உள்ள இறந்து போன செல்களை நீக்கி புதிய செல்களை வளரச்செய்கிறது.இது முகத்தில் பருக்களை உண்டாகாமல் தடுக்கிறது.
கரும்பு சாற்றில் உள்ள வைட்டமிகள் முகத்தில் உள்ள ஈரப்பதத்தை நீண்ட நேரத்திற்கு தக்கவைக்கிறது.இதில் உள்ள வைட்டமின்கள் முகத்தை மட்டுமல்லாமல் முடியையும் நன்கு வளர செய்கிறது.
சிலர் முடியை நன்கு பராமரித்தாலும் அவர்களுக்கு முடியில் பொடுகு ,கூந்தல் வறட்சி,தலையில் அரிப்பு ஏற்படுதல் போன்றவை ஏற்படுகின்றன.
கரும்பு சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வேர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.