உங்களுக்கு அதிகமா கோபம் வருமா? அப்போ இந்த பதிவை படிங்க.!
கோபத்தை கட்டுப்படுத்தும் முறை – நம்முடைய உணர்வுகளில் கோபமும் ஒன்று ,ஆனால் ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், இது உங்களுக்கும் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் தேவையில்லாத ஆபத்தை ஏற்படுத்தும். கோபத்தை குறைக்க சில வலிகள் உள்ளது அது என்னென்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
யோசித்து செயல்படுதல்:
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும் என கூறுவார்கள் அதாவது ஒருவர் எதற்கெடுத்தாலும் கோபம் அடைவார்கள், அந்த நேரத்தில் புத்தி வேலை செய்யாது .கோபப்படுவது என்பது பெருமைக்குரிய விஷயம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கோபம் அடைந்து நாம் கத்துவதற்கு முன் உங்களைச் சுற்றி பாருங்கள் இந்த இடத்தில் நாம் கோபப்பட்டால் நம்முடைய மரியாதை என்ன ஆகும் என யோசித்தால் நமக்கு கோபம் வராது, ஏனென்றால் கோபம் என்பது நம் மரியாதையை இழக்க செய்யும் ஒரு உணர்வு.
நகர்ந்து செலுத்தல் :
ஒருவேளை உங்களுக்கு கோபம் வருகிறது என்றால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல வேண்டும். உங்கள் சூழ்நிலை அங்குதான் அந்த இடத்தில் தான் இருந்தாக வேண்டும் என்றால் கோபப்படும் நேரத்தில் வார்த்தைகளை விட்டு விடக்கூடாது ஏனென்றால் கொட்டிய நெல்லை கூட அல்லலாம் ஆனால் கொட்டிய வார்த்தைகளை அல்ல முடியாது. இதனால் பிறர் மனம் புண்படும், அது காலத்திற்கும் அழியாத வடுவாகி விடும். கோபம் அந்த நேரத்திற்கு மட்டும்தான். நாம் கோபப்படுகிற அந்த ஒரு நிமிடத்தில் பல மாற்றங்கள், விளைவுகள் நம் வாழ்வில் ஏற்படும்.
அமைதி:
கோபம் வரும்போது நாம் அமைதியை கடைபிடித்தோமேயானால் மிகச் சிறப்பு. ஒரு பக்குவப்பட்ட மனிதனால் மட்டுமே அவ்வாறு இருக்க முடியும். பக்குவம் என்பது நாம் கற்ற கல்வி தெரிந்து கொண்ட அனுபவம், நம்முடைய அறிவு இவற்றின் மூலம் ஒரு மனிதன் பக்குவமடைவான். இந்த பக்குவம் இருந்தாலே அமைதி வந்துவிடும், அமைதி இருக்கும் இடத்தில் கோபம் இருக்காது.
தியானம்:
தியானம் மேற்கொள்வதால் நாம் கோபம் குறைவதோடு அது ஆரோக்கியத்தையும் வலுவாக்கும். தியானம் செய்வது அமைதி, பொறுமை, வார்த்தைகளில் கவனம் ஆகியவற்றை செய்ததற்கு மொத்த பலனையும் இந்த தியானம் கற்று கொடுத்து விடும்.
ஆகவே இந்த முறைகளை பின்பற்றி பாருங்கள், நிச்சயம் கோபம் குறையும். அதன் பின் உங்களுக்கே உங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். இந்த சமுதாயமும் உங்களை மரியாதையுடன் நடத்தும்.