தினமும் நீங்க லேட்டா சாப்புடுறீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்…
பசி என்பது நம் உடலில் தானாகவே அணிச்சையாக ஏற்பட கூடிய மொழி.இதனால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது மற்றும் அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று இந்த பதிவில் காண்போம். பொதுவாக நாம் எப்போ நேரம் கிடைக்கிறதோ அப்போது தான் சாப்பிடுகிறோம். ஆனால் இது மிகவும் தவறான செயல். பசிக்கும் போது தான் சாப்பிடவேண்டும். அதிலிருந்து 1/2மணி நேரம் தாமதமாக சாப்பிட்டால் கூட பல உடல் பிரச்சனை வரும்.
வயிறு :
கேஸ்ட்ரிக் ஆசிட் அதிகம் சுரக்கும்.அது அல்சராக கூட மாற வாய்ப்பு உள்ளது. என்னன்றால் பசி என்ற உணர்வு நமக்கு வருகிறது என்றால் இரைப்பயில் பசி நீர் உற்பத்தி ஆகிவிட்டது என புரிந்து கொள்ள வேண்டும்.
பசி நீர் என்பது தண்ணீர் அல்ல வயிற்றில் சுரக்க கூடிய என்சைம் மற்றும் ஹைட்ரோக்ளோரிக் ஆசிட் இவை சேர்ந்த கலவை. இந்த பசி நீரின் அமிலதன்மை உணவு கிடைக்காததால் இரைப்பயின் உட்சுவரை புண்ணாக்கும், இதுவே அல்சர் வர முக்கிய காரணமாகும்.
இதனால் வை துறுநாற்றம் கூட
உடல் எடை அதிகரிப்பு:
தாமதமாக உடல் எடை அதிகரிக்கும். இதனால் மெட்டப்பாலிசம் பாதிக்கப்படுகிறது. தேவையில்லாத உடல் சதை வைக்கும். சர்க்கரை நோய் வரும். மேலும் உடலில் மந்த நிலை ஏற்படும். நியாபகம் மறதி போன்றவற்றை ஏற்படுத்தும். குழப் பத்தையும் உருவாக்கும்.
ரத்த கொழுப்பு அதிகரிப்பு :
பசிக்கும் போது நாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் பிறகு அதிக பசியை ஏற்படுத்தும். அப்போது நாம் அதிக உணவுகளை எடுத்து கொள்வோம் குறிப்பாக அசைவ உணவு மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை எடுத்து கொள்ள தூண்டும். இது ஒரு பழக்கமாக மாறி தொடர்ந்து அதையே பின்பற்று வோம். நாளடைவில் இது ரத்த கொதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் ஆரோக்கியமான உணவுகளை தாமதமாக எடுத்து கொண்டால் கூட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். நாம் அன்றாடம் நம் வேலைகளை செய்ய நன்றாக நேரத்திர்க்கு உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
இவற்றை தவிர்க்க வேண்டும் என்றால் சரியான நேரத்தில் சத்தான உணவுகளை முத்ததாக எடுத்து கொள்ள வேண்டும்.